பயணிகள் பஸ் ஒன்று 15 அடி
பள்ளத்தில்
கவிழ்ந்து விபத்து
29 பேர் உயிரிழப்பு
பயணிகள்
பஸ் ஒன்று 15 அடி
பள்ளத்தில் உருண்டதில் 29 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் இந்தியாவிலுள்ள ஆக்ரா அருகே இடம்பெற்றுள்ளது.
லக்னோவில்
இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன்
புறப்பட்ட பஸ் ஒன்று டெல்லி
நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது
திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், ஆக்ரா யமுனா அதிவிரைவுச்சாலை
அருகே தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு
15 அடி பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது.
இந்த
கோர விபத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். தகவல்
அறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், படுகாயமடைந்த
20 க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர்.
இதனை
தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று
வருகிறது. பஸ்ஸின் சாரதி அதிகாலை நேரத்தில் தூக்கக்
கலக்கத்தில் இருந்ததால் விபத்து நேரிட்டதாக உயிர்பிழைத்தவர்கள்
தெரிவித்ததாக கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment