சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற
சொகுசு பஸ் விபத்திற்குள்ளாகியது
கொழும்பிலிருந்து
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாப் பயணிகளை
ஏற்றிச் சென்ற
சொகுசு பஸ் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.
வவுனியா
- ஈரப்பெரியகுளம், கல்குணாமடுப் பகுதியில்
இன்று அதிகாலை
இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த
சொகுசு பஸ் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள
மின்கம்பத்துடன் மோதியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது
பயணி ஒருவருக்கு
காயம் ஏற்பட்டுள்ளதுடன்,
சாரதிக்கு ஏற்பட்ட
நித்திரையின் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.



0 comments:
Post a Comment