கொள்கலன் 50 அடி பள்ளத்தில் குடைசாய்வு

- 5 பேர் படுகாயம்

லிந்துளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டயகம - தலவாகலை பிரதான வீதியின் மெலகுசேன பகுதியில் கோதுமை மா ஏற்றி சென்ற கொள்கலன் ஒன்று 50 அடி பள்ளத்தில் குடைசாய்ந்ததில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் லிந்துளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லிந்துளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (05) காலை 08.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலவாகலையில் இருந்து டயகம பகுதிக்கு கோதுமை மா ஏற்றி சென்ற கொள்கலன் அதிக சுமையின் காரணமாகவே குடை சாய்ந்ததாகவும் இதில் சாரதி உட்பட 5 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி லிந்துளை வைத்தியசாலையில் இருந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top