புதிய ஆளுநர்கள் நியமனம்

ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணத்திற்கான புதிய ஆளுநர்கள் சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இதன்படி, ஊவா மாகாணத்திற்கான புதிய ஆளுநராக மைத்ரி குணரத்னவும், மத்திய மாகாணத்திற்கான புதிய ஆளுநராக கீர்த்தி தென்னகோனும், தென் மாகாணத்திற்கான புதிய ஆளுநராக ஹேமால் குணசேகரவும் தமது நியமனக் கடிதங்களை இன்று பெற்றுக்கொண்டுள்ளனர்.

மத்திய மாகாண ஆளுநராக கடமையாற்றிய மைத்ரி குணரத்ன தனது பதவியை நேற்று முன்தினமும் (03), தென் மாகாண ஆளுநராக கடமையாற்றிய கீர்த்தி தென்னக்கோன் நேற்றும் (04) தமது பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

New Governors appointed: Central Province: Hon. Rajith Keerthi Tennakoon, Uva Provice: Hon. Maithri Gunaratne, Southern Province: Hon. Hemal Gunasekara.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top