முச்சக்கரவண்டி பள்ளத்தில் வீழ்ந்ததில்
தாயும் தந்தையும் பலி
- பிள்ளைகள் படுகாயம்

கந்தப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் எஸ்கடேல் தோட்டம்ஐஸ் பீலிஎன்றழைக்கப்படும் இடத்தில், சுமார் நூறு அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி ஒன்று வீழ்ந்து விபத்திற்குள்ளானதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்தோடு, 03 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று (17)  இடம்பெற்ற இவ்விபத்தில் கணவன், மனைவி ஆகியோரே உயிரிழந்துள்ளனர். 

வலப்பனை - மந்தாரநுவர - எலமுல்ல பிரதேசத்தை கணவரான டி.பி.ரூபசிங்ஹ (50)மற்றும் மனைவியான ரோஹினி  குமாரி (45) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கரவண்டியில் ஐவர் பயணித்த நிலையில், இவர்கள்  இருவரும்  பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

எலமுல்லை பிரதேசத்திலிருந்து நுவரெலியாவை நோக்கி குறித்த முச்சக்கரவண்டியில் தாய், தந்தை, 06,16,19 வயதுடைய சிறுவன், சிறுமிகள் ஆகியோர்  பயணித்துள்ளனர்.

முச்சக்கரவண்டியை தந்தை செலுத்தி வந்த நிலையில், கந்தப்பளை எஸ்கடேல் "ஐஸ் பீலி" என்ற இடத்தில் பிரதான பாதையை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி பாய்ந்து விபத்திற்குள்ளானது.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top