ஜனாதிபதித் தேர்தலில்
அனுரகுமாரவை போட்டியில் நிறுத்துகிறது
மக்கள் விடுதலை முன்னணி
வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜேவிபி சார்பில்,
அந்தக் கட்சியின்
தலைவர் அனுரகுமார
திசநாயக்க போட்டியிடவுள்ளார்
என, மக்கள்
விடுதலை முன்னணி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி
வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு மிகவும் பொருத்தமானவர் அனுரகுமார
திசநாயக்கவே என்று, அதிகளவான மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
நாளை
மறுநாள் காலிமுகத்திடலில்
நடைபெறவுள்ள ஜேவிபியின் மாநாட்டில், அனுரகுமார திசநாயக்கவை
வேட்பாளராக அறிவித்து, ஒப்புதல் அளிக்கப்படவுள்ளது.
முன்னதாக,
அரச சேவையில்
இருந்து ஓய்வுபெற்ற,
புகழ்பெற்ற ஒருவரை மக்கள் விடுதலை முன்னணி
வேட்பாளராக முன்நிறுத்த முடிவு செய்யப்பட்டது, எனினும்,
இந்த முடிவு
மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
1982ஆம் ஆண்டு நடந்த முதலாவது
ஜனாதிபதி தேர்தலில்
மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அதன்
நிறுவுநரான றோகண விஜேவீர போட்டியிட்டு, 273,428 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

0 comments:
Post a Comment