இன்று அதிகாலை ஏற்பட்ட கோரச் சம்பவம்
இரு பெண்கள் உட்பட மூவர் பலி
- இருவர் வைத்தியசாலையில்

தம்புள்ளை - ஹபரண வீதியின் குடாமீகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் குறித்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேன் ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் வேனில் பயணித்த இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


*மல்லவபிட்டியகுருநாகல் என்ற முகவரியை சேர்ந்த 33 வயது அப்துல் நபார் ராஜா ( வேன் சாரதி)

* பொலனறுவை முஸ்லிம் கொலனியை சேர்ந்த 40 வயது  பாத்திமா சிபானா 


*பொலனறுவை முஸ்லிம் கொலனியை சேர்ந்த 27 வயது பாத்திமா சப்னா  ஆகியோரே உயிரிழந்து உள்ளனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த இருவர் தம்புள்ளை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் டிப்பர் ரக வாகனத்தின் ஓட்டுனர் ஹபரண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top