குடிநீரை
சிக்கனமாக பாவிக்கவும்
அம்பாறை
மாவட்ட பாவனையாளர்களுக்கு
அறிவுறுத்தல்
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான வரட்சியினால் அம்பாறை
மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கும் அம்பாறை கொண்டவட்டுவான் பிரதான
நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால், நீர்ப் பாவனையாளர்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அக்கரைப்பற்று
பிராந்திய முகாமையாளர் கே.என். கரீம் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியான வரட்சி நிலை காரணமாக கொண்டவட்டுவான் பிரதான நீர்த்தேக்கத்தின்
நீர் மட்டம் குறைந்துள்ளதால் தற்போது குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்ட
அளவில் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வரட்சி நிலை தொடருமானால் இந் நீர்த் துண்டிப்பு தொடருமெனவும் அவர்
மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே, பாவனையாளர்கள் நீரை நீர் தாங்கியில் சேமித்து
சிக்கனமாகவும் விரையமின்றியும் பாவிக்குமாறு அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர்
கேட்டுக் கொண்டுள்ளார்.

0 comments:
Post a Comment