மோட்டார் சைக்கிளுக்குள் ​புகுந்த
வெள்ளை நாகம்

வவுனியா, ஏ9வீதியில் வெள்ளை நிற நாகபாம்பு மோட்டர் சைக்கிளில் ஒன்றினுள் புகுந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இச் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றது.

வெள்ளைநாகம் ஒன்று வீதிக்கு வந்தமையால் அதனை பார்வையிட மக்கள் ஒன்று கூடினர். வீதியால் சென்ற அனைவரும் தமது வாகனங்களை நிறுத்திவிட்டு குறித்த பாம்பினை பார்வையிட குவிந்தனர்.

இதன்போது, குறித்த பாம்பு வீதியில் நின்ற மோட்டார் சைக்கிள் ஒன்றிற்குள் சென்று ஒளிந்து கொண்டது. இதனால் அதனை வெளியில் எடுத்து விட மோட்டர் சைக்கிளை சாந்தசோலை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு நின்ற ஒருவர் நாகபாம்பினை கையினால் பிடித்து எடுத்து ஆலயத்தில் விட்டார்.

இதன்போது, அப்பகுதியில் சிறிது நேரம்  பரபரப்பு ஏற்பட்டிருந்ததுடன் ஏ9 வீதியில் சற்று நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top