சுதந்திரக்
கட்சி தலைமை அலுவலகத்திற்கு
அதிரடியாக
நுழைந்தார் சந்திரிகா!
சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு முன்னாள் ஜனாதிபதி
சந்திரிக்கா குமாரதுங்க திடீரென விஜயம் மேற்கொண்டமையினால் பரபரப்பு நிலை
ஏற்பட்டுள்ளது.
அங்கு சென்றவர் பலருடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிய
வருகிறது.
கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடன் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில்
முன்னாள் ஜனாதிபதியின் அதிரடி விஜயம் அமைந்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை தெரிவு செய்யும் பேச்சுவார்த்தைகள்
இடம்பெறும் வரும் நிலையில் சந்திரிக்காவின் விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக
பார்க்கப்படுகிறது.

0 comments:
Post a Comment