பெறுபேறுகளின் மீளாய்வு விண்ணப்பத்தை
அதிபர் ஊடாக ஒக். 21 இற்கு முன்
விண்ணப்பிக்கலாம்


பெறுபேறுகளின் மீளாய்வு விண்ணப்பத்தை அதிபர் ஊடாக ஒக். 21 இற்கு முன் விண்ணப்பிக்கலாம்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள், மற்றும் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் வெளியாகி உள்ளன.

2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களின் ஊடாக பெறுபேறுகளை பார்வையிடலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உரிய சுட்டிலக்கதை சரியாக வழங்குவதன் மூலம் பெறுபேறுகள் மற்றும் வெட்டுப்புள்ளிகளை பெற முடியும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறை புலமைப்பரிசில் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 15,000 இலிருந்து 20,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, இதில் விசேட தேவையுடைய மாணவர்கள் 250 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய, இம்முறை அகில இலங்கை ரீதியான தரப்படுத்தல் (Rank) மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும் வெட்டுப்புள்ளிகள், அந்தந்த மொழி மற்றும் மாவட்டத்திற்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பெறும் விசேட தேவையுடைய மாணவர்கள் பிரிவில், அவர்கள் பெற்ற புள்ளிகளுடன் அவர்கள் புலமைப்பரிசில் பெற்றுள்ளதை உறுதிப்படுத்தும் விசேட அறிவிப்பு உள்ளடக்ப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இம்முறை 2995 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு 3 இலட்சத்து 39 ஆயிரத்து 369 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top