பாடசாலை பஸ் கவிழ்ந்ததில்
மாணவர்கள் உட்பட 28 பேர்
வைத்தியசாலையில்

ஹட்டனிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற தனியார் பஸ் ஒன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உட்பட 28 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா வனராஜா பகுதியிலே இன்று (08) பிற்பகல் 03 மணியவில் விபத்து இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் நகர பகுதியிலுள்ள பாடசாலைகளில் கல்விப்பயிலும் பொகவந்தலாவ பிரதேச மாணவர்களை ஏற்றிச்சென்ற பாடசாலை சேவை பஸ்ஸே இவ்வாறு பாதையை விட்டு விலகி 15 பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பஸ்ஸில் பயணித்த 18 மாணவர்கள் உட்பட 28 பேர் சிறுகாயமுற்ற நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top