மயானத்தில் இருந்து
ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அலஸ்தோட்டம் பிரதேச மாயானத்தின் உள்ளே ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாயானத்தில் இறந்தவர் ஒருவரின் நல்லடக்கத்திற்காக குழி வெட்டும்போது பிளாஸ்டிக் பெரல் ஒன்று தட்டுப்பட்டதாகவும் அதனை திறந்து பார்க்கும்போது ஆயுதங்கள் காணப்பட்ட நிலையில் குழி அகல்பவர்களினால் உப்புவெளி பொலிஸாருக்கு தெரிவிக்கப்ட்ட நிலையில் தாம் ஆயுதங்களை கைப்பற்றியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் M-17 Ab-2 வர்க்க ரி 56 துப்பாக்கிகள் 5 (தயாரிப்பு யுகஸ்லாவியா ), எஸ்.எம்.ஜி-1, ரி 56 துப்பாக்கி மகஸீன் 5, எஸ்.எம்.ஜி- மகஸீன் 3, ரி 56 துப்பாக்கி சன்னங்கள் 1700, 9 எம்.எம் துப்பாக்கி சன்னங்கள் 32 என்பன தம்மால் கைப்பற்றப்பட்டதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட பிரதேசத்தில் இந்தியா இராணுவ காலத்தில் டெலோவின் பயிற்சி முகாம் இயங்கியது குறிப்பிடத்தக்கது.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் யாவும் சுத்தப்படுத்தி பாவிக்கும் நிலையில் காணப்படுவதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top