Tuesday, June 30, 2015

உலகிலேயே முதல் முறையாக ரோபோ திருமணம் ! ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்!!


உலகிலேயே முதல் முறையாக ரோபோ திருமணம்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்

உலகிலேயே முதன் முறையாக இரண்டு ரோபோக்களுக்கு திருமணம் நடந்த நிகழ்ச்சி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுள்ளது.
இந்த ரோபோக்களை மய்வா டெங்கி என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. ஆண் ரோபோவுக்கு புரோயிஸ் என்றும், பெண் ரோபோவுக்கு யுகிரின் என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஆண் ரோபோ அளவில் பெரியதாக எந்திர மனித உருவிலும், பெண் ரோபோ ஜப்பான் பொம்மை வடிவத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த பெண் ரோபோவுக்கு   மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

திருமணம் முடிந்ததும் இரு ரோபோக்களும் ஒருவரை ஒருவர் முத்தமிட்ட கொண்ட காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது. திருமண விழாவில் இரு தரப்பிலும் பல ரோபோக்கள் விருந்தினர்களாக பங்கேற்றன. பின்னர் ஜப்பான் முறைப்படி ஆடல், பாடல் போன்ற இசை நிகழ்ச்சி நடந்தது அறிவிக்கப்படுகின்றது.


No comments:

Post a Comment