Tuesday, June 30, 2015

இன்று மாலையே எம்எல்ஏவாக பதவியேற்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா

இன்று மாலையே எம்எல்ஏவாக பதவியேற்கிறார்
தமிழக முதல்வர் ஜெயலலிதா

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் தமிழக முதல்வரும், அதிமுக வேட்பாளருமான ஜெயலலிதா வெற்றி பெறுவது உறுதியான நிலையில், அவர் இன்று மாலை 4.45 மணிக்கு எம்எல்ஏவாக பதவியேற்க உள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா முன்னிலையில் உள்ளார்.
அவரது வெற்றி உறுதியான நிலையில், இன்று மாலையே அவர் எம்எல்ஏவாக பதவி ஏற்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தலைமைச் செயலகத்தில் செய்யப்பட்டு வருவதகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. தற்போது 14 வது சுற்று முடிவு வெளியாகியுள்ளது.

இதில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா 1,46,247 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி. மகேந்திரன் 8,854  வாக்குகள் பெற்றுள்ளார். டிராபிக் ராமசாமி 3,260 வாக்குகள் பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment