Tuesday, June 30, 2015

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா அமோக வெற்றி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்
முதல்வர் ஜெயலலிதா அமோக வெற்றி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி. மகேந்திரனை விட 1.50 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
16 வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா 1,60921 வாக்குகள் பெற்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி. மகேந்திரன் 9,669   வாக்குகள் பெற்றுள்ளார். டிராபிக் ராமசாமி 4,145 வாக்குகள் பெற்றுள்ளார்இந்நிலையில் 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து  தனக்கு வாக்களித்த ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு  முதல்வர் ஜெயலலிதா  நன்றியை தெரிவித்துள்ளார். இந்த இடைத்தேர்தல் 2016ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டம் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று மாலையே அவர் எம்எல்ஏவாக பதவி ஏற்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தலைமைச் செயலகத்தில் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வமான அறிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment