Wednesday, February 24, 2016

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூருக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் கௌரவ கலாநிதி பட்டம்

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூருக்கு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினால்

கௌரவ கலாநிதி பட்டம்
Samsul Muna

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் இந்த வருட பட்டமளிப்பு விழாவின் போது முன்னாள் அமைச்சர் .ஆர்.மன்சூருக்கு கெளரவ கலாநிதி பட்டத்தினை வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்துள்ள தீர்மானத்தினை வரவேற்பதாகவும், வாழ்த்துவதாகவும் தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் அம்பாரை மாவட்ட கிளைத் தலைவரும் அதிபருமான .வீ.எம்.சவாஹிர் மற்றும் செயலாளரும் அதிபருமான எம்.எம்.எம்.நியாஸ் ஆகியோர்கள் இணைந்து விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளனர்.
அவ் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் .ஆர்..மன்சூரின் பங்களிப்பு பாரிய பங்களிப்பாகும் அவர் குவைத் தூதுவராக கடைமையாற்றிய சுமார் இரண்டு வருட காலப்பகுதியில் குவைத் நிதியத்தினுடாக 600 கோடி ரூபாய்களை நன்கொடையாக பெற்றுக்கொடுத்துள்ளார். இன்னும் பல நிதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் வேறு சில அரசியல்வாதிகளின் முயற்சி காரணமாக தமது சேவையை சுருக்கி கொண்டு நாடு திரும்பினார் எனினும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில் தொடந்தும் அக்கறையுடன் இருந்து வருகின்றார்.முன்னாள் அமைச்சர் .ஆர்.மன்சூரின் முயற்சியினால் வழங்கப்பட்ட நிதி உதவிகள் அப்பல்கலைகழகத்தின் கட்டுமான பணிகளுக்கு உந்துசக்தியாக அமைந்து மாணவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒருவரின் சேவைக்காக கடந்த காலங்களில் முன்னாள் அமைச்சர் .ஆர்.மன்சூரிற்கு கௌரவ கலாநிதி பட்டத்தினை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அப்போதைய நிருவாகம் நடவடிக்கை எடுக்கவில்லை

எனினும் தற்போதுள்ள நிர்வாகம் இதற்கான தீர்மானத்தினை எடுத்து இந்த வருடம் கொழும்பில் நடைபெறவுள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இந்த கௌரவ பட்டத்தினை முன்னாள் அமைச்சர் .ஆர்.மன்சூரிற்கு வழங்கப்படவுள்ளதற்காக தமது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment