Monday, May 30, 2016

மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா இராஜினாமா?

மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர்
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா இராஜினாமா?


புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தனது இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துவிட்டு வெளிநாடு சென்றுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.
தனக்கான பொறுப்புகள் உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்படாமை மற்றும் அமைச்சு செயல்பாடுகள் குறித்து அதிருப்தியடைந்த நிலையில் அவர் தனது இராஜினாமாவை சமர்ப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த செய்தி தொடர்பில் அமைச்சரின் ஊடகப் பிரிவு, அமைச்சர் வெளிநாட்டு சென்றுள்ளதை உறுதி செய்துள்ளது. ஆனால். இராஜினாமா செய்தி ஒரு வதந்தி எனத் தெரிவித்துள்ளது..

No comments:

Post a Comment