Monday, February 27, 2017

சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் பலியானவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரிப்பு


சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல்

பலியானவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரிப்பு

களுத்துறை பகுதியில் சிறைச்சாலை பஸ் ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறைச்சாலை பஸ்ஸின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த ஏழுபேரில், சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் அடங்குகின்றனர். அத்துடன், சம்பவத்தில் காயமடைந்த அதிகாரிகள் நால்வர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இந்த துப்பாக்கி பிரயோகத்தினால் ஐந்து கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரி இருவர் உயிரிழந்துள்ளனர்.
பாதாள குழுவின் முக்கிய உறுப்பினர் சமன் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
மேலும், 4 பேர் காயத்திற்கு மத்தியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
பாதாளக் குழு உறுப்பினர்களுடன் சென்ற சிறைச்சாலை பஸ் வண்டி மீதே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இனந்தெரியாத குழுவினராலேயே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

වෙඩි තැබීමෙන් මිය ගිය බන්ධනාගාර නිල ධාරීන්-
1) එස් සන්නිගම් - බන්ධනාගාර නියාමක
2) එස් ආර් විජේරත්න - බන්ධනාගාර ජේලර්
වෙඩි තැබීමෙන් මිය ගිය සැකකරුවන් -
1) එම් පී අරුණ උදයංග පතිරණ (සමයං)
2) සන්තක චලන තිලක් මල්ලිකාගේ
3) කෝරලගේ අමිල ප්රසන්න සම්පත්
4) වාද්දුව පතිරගේ කැළුම් ප්රියංකර
5) ලිඳමුලගේ සුරංග ප්රසන්න කුමාර




No comments:

Post a Comment