Sunday, April 1, 2018

ரணில் வெற்றி பெறுவது மைத்திரியின் கையில் தான் உள்ளது - மஹிந்த தெரிவிப்பு


ரணில் வெற்றி பெறுவது
மைத்திரியின் கையில் தான் உள்ளது
-    மஹிந்த தெரிவிப்பு



பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி பெறுவது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையிலேயே இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ஹிந்த ராஜபக் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபோல சிறிசேனவினால் நம்பிக்கையில்லா பிரேரணையின் வெற்றியை உறுதிப்படுத்த முடியும்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை ஆதரித்து வாக்களிக்கச் செய்வதன் மூலம் அதனை செய்ய முடியும்.” என்றும் ஹிந் ராஜபக் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக மைத்திரிபால சிறிசேனவின் கட்டுப்பாட்டில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி இன்னமும் எந்த அதிகாரபூர்வ முடிவையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment