Sunday, June 3, 2018

சுதந்திரக் கட்சியின், ஆலோசனை குழுவில் சந்திரிகா, மஹிந்த, ஜயரத்னவுக்கு பதவி


சுதந்திரக் கட்சியின், ஆலோசனை குழுவில்
சந்திரிகா, மஹிந்த, ஜயரத்னவுக்கு பதவி


சிறிலங்கா சுதந்திரக் கட்சியின், ஆலோசனை குழு உறுப்பினர்களாக மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் பிரதமர் டீ.எம்.ஜயரத்ன ஆகிய மூவருமே நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன்  சிறிலங்கா சுதந்திரக் கட்சியின், தற்காலிக சிரேஷ்ட துணைத் தலைவர்களாக, நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த, டப்ளியு.டீ.ஜே. செனவிரத்ன, அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment