திருகோணமலையில்
தகர்க்கப்பட்ட பள்ளிவாசல்!
கிண்ணியா
பகுதியிலுள்ள சீனன்குடாவை அடுத்திருக்கும்
கரிமலையூற்று பழைமைவாய்ந்த பள்ளிவாசல் இடித்துத்
தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது.
1880ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த
கரிமலையூற்று ஜும்ஆ பள்ளிவாசல். 1926ம் ஆண்டு
புனரமைக்கப்பட்டு , 1947ம் ஆண்டு
ஜும்ஆ பள்ளிவாசலாக
அரசாங்கத்தில் பதியப்பட்டிருந்தது. முழுமையாக தற்போது
இப்பள்ளிவாசல் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை
மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தினை அண்மித்த வெள்ளை
மணல் பகுதியில்
இருக்கும் கரிமலையூற்று
எனும் முஸ்லிம்
கிராமம் உள்ளது.
அப்பகுதி தற்போது
முற்று முழுதாக
இராணுவ ஆக்கிரமிப்புக்குள்
இருக்கும் நிலையில்,
அக்கிராமத்தின் மார்பிள் பீச் கடற்கரையோரம் இருந்த
பள்ளிவாசலே இவ்வாறு இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டு அரசாங்கத்தின் தேசிய
மீலாத் விழா
செயற்திட்டத்தின் கீழ் 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபா
ஒதுக்கப்பட்டு இந்தப் பள்ளிவாசல் அழகுற, விரிவுபடுத்தப்பட்டிருந்தது.
இதற்கான நிதியை
அப்போதைய கூட்டுறவு
அபிவிருத்தி அமைச்சர் நஜீப் ஏ. மஜீத்
பெற்றுக் கொடுத்திருந்தார்.
முன்னர்,
2009 ஆம் ஆண்டில்
உள்நாட்டுப் போர் முடிவடைந்த நேரத்தில், இராணுவத்தின்
தேவைக்காக இந்தப்
பகுதியை இராணுவம்
தன் கட்டுப்பாட்டில்
எடுத்துக் கொண்டதாகத்
தெரிவிக்கப்படுகின்றது. அப்போது, கரிமலையூற்று மக்களை
அந்தக் கிராமத்தில்
இருந்து வெளியேற்றி
வேறு இடங்களில்
இராணுவத்தினர் குடியேற்ற வைத்தார்கள் எனவும் அறிவிக்கப்படுகின்றது.
இந்த
நிலையில் அந்தப்
பள்ளிவாசல் கடந்த ஐந்து வருடங்களாக இயங்காமல்,
மூடியே கிடந்துள்ளது.
பல அரசியல்
பிரமுகர்கள் குறிப்பிட்ட அந்தப் பள்ளிவாசல் விவகாரத்தில்
ஒரு நல்ல
தீர்வினைப் பெற்றுத் தருவோம் என வாக்குறுதி
அளித்திருந்தனர். இந்நிலையில் இந்தப் பள்ளிவாசல்
முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
இது
குறித்து, பள்ளிவாசல்
நிர்வாகத்தினர் கிண்ணியா பொலிஸில் புகார் செய்துள்ளனர்
எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாழடைந்த
நிலையில் காணப்பட்ட
பள்ளிவாசல் கட்டடம் கடந்த சில நாட்களாக
காற்றுடன் கூடிய
பலத்த மழை
காரணமாகவே இடிந்து
விழுந்துள்ளதாக இராணுவத்தினர் விளக்கம் அளித்துள்ளாதாக கூறப்படுகின்றது
இந்தப்
பள்ளிவாசல் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும்
அதன் பெருமை
மற்றும் முக்கியத்துவத்தை
இராணுவத்துக்கு விளக்கியதையடுத்து அதனை ஏற்றுக்கொண்ட இராணுவம்,
பள்ளிவாசலை புனரமைத்துத் தர முன்வந்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறியுள்ளார்.
அவ்வாறு
பள்ளிவாசல் புனரமைக்கப்பட்ட பிறகு முஸ்லிம்கள் தொழுகை
மேற்கொள்ள வாய்ப்பு
கிடைக்குமா? என்று முதலமைச்சரிடம் செய்தியாளர் கேட்டபோது,
பள்ளிவாசல் உயர் பாதுகாப்பு வளையத்தில் அமைந்திருப்பதால்
வெளி நபர்களை
அங்கே செல்ல
அனுமதிப்பதற்கான வாய்ப்புகளோ அல்லது பள்ளிவாசலைத் திறந்து
விடுவதற்கான வாய்ப்புகளோ தற்போதைக்கு இல்லை என்று
அவர் கூறியுள்ளார்.
இதேவேளை,
இது தொடர்பாக தகவலறிந்த முஸ்லிம்
காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக், இராணுவ
அதிகாரிகளை சந்தித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment