நவாஸ் ஷெரீப் பதவி விலக போராட்ட தலைவர்கள் கெடு


பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீப் விலக வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், தாரீக்,,இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் மற்றும் மதத் தலைவரும் பாகிஸ்தான் ஆவாமி தாரிக் அமைப்பின் தலைவருமான தாகிருல் காத்ரி கோரி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் பேரணி நடத்தினர். இஸ்லாமாபாத்துக்குள் நுழைந்த அவர்கள், நகருக்கு வெளியே முகாமிட்டுள்ளனர். இதனிடையில் இன்று (திங்கட்கிழமை) மாலைக்குள் பதவி விலக வேண்டும் என்று இருவரும்  ஷெரீபுக்கு கெடு விதித்துள்ளனர்.

அவ்வாறு பதவி விலகாவிட்டால், நாடாளுமன்றம், முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ள பாதுகாப்பு மிகுந்த பகுதிக்குள் நுழைந்து முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இதனால்,அங்கு பதற்றம் நிலவுகிறது. இஸ்லாமாபாத் நகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பொலிஸாருடன் இராணுவத்தினரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top