சமூக வலைத்தளத்தில் புதிய பக்கம் திறந்து
ஊழல் அதிகாரிகளின் படங்களை பேஸ்புக்கில் வெளியிட
இந்தியாவில் முடிவு


இலஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட இந்திய இலஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது. இதனை இலஞ்ச ஒழிப்புத் துறை (.சி.பி.) டைரக்டர் ஜெனரல் பிரவீன் தீக்ஷித் உறுதி செய்துள்ளார். பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் இலஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய பக்கம் திறக்கப்படும். அதில் இலஞ்சம் வாங்கி பிடிபடும் அதிகாரிகளின் புகைப்படம் மற்றும் அவர்களை பற்றிய விவரங்கள் வெளியிடப்படும் என்று இந்திய இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் அறியும்படி செய்து அவமானப்படுத்தினால் ஊழல் அதிகாரிகள் திருந்துவார்கள் என்ற எதிர்பார்ப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஊழல் அதிகாரிகளை மக்கள் தெரிந்து கொள்ளும்படி செய்ய பேஸ்புக்தான் மிகவும் வசதியாக இருக்கும் என்றும் அந்த அதிகாரிகள்  மேலும் தெரிவித்துள்ளனர்

புதிய பேஸ்புக் பக்கம் திறந்து இலஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் படங்களை பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் வெளியிட்டால் இலஞ்சம் வாங்குவது மிகவும் குறைந்துவிடும் என நம்புகிறோம். அதற்காக எங்கள் பேஸ்புக்கை பார்க்கும்படி இளைஞர்களை கேட்டுக்கொள்வோம். அதில் சம்பந்தபட்ட அதிகாரிகளின் குழந்தைகள் மனைவி மற்றும் உறவினர்களும் அவர்களை அறிந்து கொள்வார்கள். அதன்பின் அந்த அதிகாரிகள் இலஞ்சம் வாங்க பயப்படுவார்கள் என்றும் இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்பேஸ்புக்கில் இலஞ்சம் வாங்கிய அதிகாரிகளின் படத்துடன் அவர்கள் வகித்த பதவி, வாங்கிய இலஞ்சத் தொகை, அவர்கள் வீடுகளில் நடத்திய சோதனை விவரம், வீட்டில் கைப்பற்றிய பொருட்கள் போன்ற விவரங்களும் அதில் வெளியிடப்படும்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top