தன் உயிரையும்
பொருட்படுத்தாமல் தண்டவாளத்தில் விழுந்த
குழந்தையை மீட்டு பிள்ளைப் பாசத்தை
நிருபித்த தாய்
லண்டன் சுரங்கப்பாதை தண்டவாளத்தில் தள்ளுவண்டியில் இருந்த குழந்தை விழுந்ததும் தன்
உயிரைக் கூட பொருட்படுத்தாமல் குழந்தையின் அம்மா ரயில் வருவதற்கு முன்பு தாவி தன் குழந்தையை மீட்கும் தருணங்கள் கொண்ட படங்களை பிரிட்டிஷ் போக்குவரத்து பொலிஸார் (BTP) வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த
ஜூலை 23 ஆம் திகதி மாலை
7.30 மணிக்கு நடந்துள்ளது என்று
அதிகாரிகள் கூறியுள்ளனர். கூட்ஜ் (Goodge) ஸ்ட்ரீட் ரயில்நிலையத்தில் குழந்தையின் அப்பா
தன் மனைவியின் பயணச்
சாமான்களை வாங்குவதற்காக மாடிபடிக்கட்டுக்கு அருகில் குழுந்தை இருந்த தள்ளுவண்டியை வைத்துள்ளார். ரயில் சென்ற
அதிர்வால் அந்த தள்ளுவண்டி நகர்ந்து சென்று தண்டவாளத்தில் விழுந்தது, அதனை கண்ட
அக்குழந்தையின் அம்மா யாருடைய உதவியையும் நாடாமல் தாவி
குதித்து குழந்தையை மீட்டுள்ளார். குழந்தை விழுந்த தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்த ரயில் ஓட்டுநர் இதனை கண்டதும் ரயிலை
உடனே நிறுத்தினார். இந்த
சம்பவத்தை பற்றி ரயில்
நிலையத்தில் எந்த அதிகாரியிடமும் தெரிவிக்காமல் சென்ற இந்த
தம்பதிகளை பற்றி அடையாளம் காண லண்டன் பொலிஸார் தற்போது முயற்சிக்கின்றனர்.
இந்த சம்பவங்களை கொண்ட சிசிடிவி புகைப்படங்கள் திங்கள்கிழமை அன்று வெளியிடப்பட்டது. BTP தலைமை
ஆய்வாளர் மார்க் லாவ்ரி, என்பவர் 'தண்டவாளத்தில் விழுந்த குழந்தைக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய
வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். மேலும், தன் உயிரையும் பெரியதாய் கருதாமல் குழந்தையை மீட்டுள்ள தாயை பற்றி பெருமையாகவும் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment