போர் குற்றம் குறித்து
இலங்கைக்கு செல்லாமலேயே
சிறப்பாக விசாரிக்க
முடியும்
நவநீதம் பிள்ளை நம்பிக்கை
இலங்கைக்கு
செல்லாமலேயே, அங்கு நிகழ்ந்ததாகக் கூறப்படும்
தமிழர்கள் படுகொலை
மற்றும் போர்க்குற்றங்கள்
குறித்து சுதந்திரமாக
அதே சமயம்
சிறப்பான முறையில்
விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்று ஐ.நா. மனித
உரிமை ஆணையாளர்
நவநீதம் பிள்ளை
நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார்.
ஐ.நா. விசாரணைக்
குழுவை இலங்கைக்குள்
அனுமதிக்க இலங்கை
அரசு மறுத்துவிட்டது குறித்து ஆங்கில
செய்தி நிறுவனம்
ஒன்றுக்கு அவர்
அளித்துள்ள மின்னஞ்சல் செய்தியில், விசாரணையின் இறுதியில்
அளிக்கப்படும் அறிக்கையின் நம்பகத்தன்மை, நாட்டுக்குள் குழு
அனுமதிக்கப்பட்டதா என்பதில் இல்லை,
இனப் படுகொலைக்கு
எதிராக அளிக்கப்படும்
ஆதாரங்களின் அடிப்படையிலேயே உள்ளது.
இதற்கு
ஏற்கனவே சிரியா,
வடகொரியா போன்ற
நாடுகள் தொடர்பான
விசாரணை அறிக்கைகள்
உதாரணமாக உள்ளன.
எனவே,
இலங்கை போர்க்குற்றம்
குறித்து விசாரிக்க
அமைக்கப்பட்டுள்ள 12 பேர் கொண்ட
விசாரணைக் குழு
ஜெனிவாவைத் தளமாகக் கொண்டே செயற்படும். தேவைப்படும்
போது அவர்கள்
ஏனைய நாடுகளுக்குப்
பயணம் மேற்கொள்வார்கள்.
அவர்களது அறிக்கை
எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள்
பேரவையில் சமர்ப்பிக்கப்படும்.
போர்க்குற்ற
மீறல்களுக்கு யார் பொறுப்பு என்று கண்டறிந்து,
அவர்கள் மீது
நடவடிக்கை எடுப்பதற்கே
இந்த விசாரணை
அவசியமாகிறது. இந்த விசாரணை நிலையான அமைதியையும்,
நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த மற்றும்
அனைத்து இலங்கையர்களுக்கும்
பயனளிக்கும் வகையில் துவக்கப்பட்டுள்ளது
என்பதை அனைவரும்
புரிந்து கொள்வதே
முக்கியம் என்றும்
கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment