இந்தியாவில்
தூக்கிலிடப்படும் முதல் பெண்:
மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள
சகோதரிகள்
இந்தியாவிலுள்ள
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் சகோதரிகள் இருவர்
தூக்கு தண்டனையை
தற்போது எதிர்நோக்கியுள்ளனர். கடந்த 2001 ஆண்டில்
13 குழந்தைகளைக் கடத்தி, அவர்களில் 9 பேரைக் கொன்ற
அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது நிறைவேற்றப்பட்டால், இந்தியாவில் தூக்கிலிடப்படும்
முதல் பெண்ணாக
அவர் இடம்பெறுவார்.
ரேணுகா
கிரண் ஷிண்டே,
அவரது சகோதரி
சீமா மோகன்
காவித் ஆகியோரின்
கருணை மனுக்களை
கடந்த மாதம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்துவிட்டார். இதை அடுத்து, மாநில
அரசின் உள்துறைக்கு
அவர்கள் தரப்பில்
இருந்து வர
வேண்டிய அனைத்துவிதமான
சட்ட சம்பிரதாயங்கள்
மற்றும் அவர்களை
தூக்கிலிடுவதற்கான கால அவகாசம்
சனிக்கிழமையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தூக்கு தண்டனையை
இந்த இரு பெண்களும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
0 comments:
Post a Comment