இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக மீனவர்கள் விடுதலை 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அறிவிப்பு



இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி, நல்லெண்ண அடிப்படையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை காவலில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு ஜனாதிபதி ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார் இவ்வாறு டுவிட்டரில் கூறப்பட்டுள்ளது. இலங்கை சிறைகளில் உள்ள 93 தமிழக மீனவர்களையும், அவர்களது 62 படகுகளையும் இலங்கை அரசு விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.

இந்த நிலையில், இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி நல்லெண்ண அடிப்படையில், மீனவர்களை விடுதலை செய்யப் போவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. மோடி அரசு பதவியேற்ற பின்னர், 225 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top