ஜெயலலிதா நுரையீரலில் இருப்பது தொற்று கிருமி இல்லை?
தமிழச்சியின் அடுத்த அதிர்ச்சியான பதிவு!
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நுரையீரலில் இருப்பது தொற்று கிருமி இல்லை என தமிழச்சி தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த 15 நாட்களுக்கு மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக லண்டன் மருத்துவர் ரிச்சர்டு தலைமையிலான மருத்துவர்கள் குழு மற்றும் உடல் நிபுணத்துவம் மருத்துவர்களான டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு என சிறப்பு மருத்துவர்கள் பலர் சிகிச்சை அளித்து வருகின்றன.
அதைத் தொடர்ந்து நேற்று அப்பல்லோ நிர்வாகம் அளித்த மருத்துவ அறிக்கையில் ஜெயலலிதாவின் உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், சிகிச்சை தொடர்பாக அவர் நீண்ட நாட்களுக்கு மருத்துவமனையில் தங்க நேரிடும் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் பிரான்ஸ்சைச் சேர்ந்த தமிழச்சி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதல்வர் ஜெயலலிதா மர்மமான முறையில் இறந்து விட்டார் என முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். அது தமிழகத்தில் காட்டுத் தீ போல் பரவி பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
அதன் பின்னர் மருத்துவர்கள் ஜெயலலிதா நல்ல நிலையில் இருக்கிறார் எனவும் தொடர்ந்து சிகிச்சை அளித்தால் சில தினங்களில் வீடு திரும்பிவிடுவார் என கூறினர். முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து தற்போது தமிழச்சி என்பவர் தனது முகநூல் பக்கத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொற்று நோய் இல்லை எனவும் Species என்ற செலுத்தப்பட்ட கிருமி என்றும் பதிவேற்றம் செய்துள்ளார்.

0 comments:
Post a Comment