முதல்வர் ஜெயலலிதாவை
சந்திக்க முடியவில்லை
- ஸ்டாலின்
முதல்வர் ஜெயலலிதாவின்., உடல்நலம் விசாரித்து திரும்பிய ஸ்டாலின்,
'முதல்வர் ஜெயலலிதாஉடல்நலம் தேற கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார்.
கருணாநிதியின் உத்தரவின்படி, நேரில் நலம் விசாரிப்பதற்காக அப்பல்லோ வந்தேன். ஆனால் ஜெயலலிதாவை நேரில் சந்திக்க முடியவில்லை. இருப்பினும், மருத்துவ குழுவினர் மற்றும் அமைச்சர்களிடம் அவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன். அவர்கள் ஜெயலலிதா விரைவில் நலம் பெறுவார் என தெரிவித்தனர். நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரிடம் அவரின் உடல்நிலை குறித்து விசாரித்தேன்.முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற்று பணிக்கு திரும்ப வாழ்த்துகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகிய இருவரும் ஸ்டாலினுடன் அப்பல்லோவிற்கு சென்றனர்.


0 comments:
Post a Comment