சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு
கட்டட விஸ்தரிப்பு கட்டுமானப் பணிகள் தொடர---------

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு கட்டட விஸ்தரிப்பு கட்டுமானப் பணிகள்  2013 இல் ஆரம்பிக்கப்பட்டு  சரியான அரசியல் பின்புலம் இல்லாததால் கல்லில் நாருரிப்பது போன்று மண்டியிட வேண்டியிருப்பதாக டாகடர் நாகூர் ஆரிப் கவலை வெளியிட்டுள்ளார்.
சாய்ந்தமருது மக்களின் அதிக எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்று கல்முனை மாநகர சபையில் சாய்ந்தமருதைச் சேர்ந்த ஏ.பஷீர், ஏ.எல்.அப்துல் மஜீத், எம்.ஐ.எம்.பிர்தெளஸ், ஏ.நிஸார்தீன் ஆகியோர் மக்களின் நலன் காக்க சபையின் கதிரைகளில் இருந்தனர்.
தற்பொது சபையினரின் பதவிக்காலம் முடிவுற்றதால் அவர்கள் பதவியை இழந்தாலும் மக்களுக்கான சேவையை அவர்கள் கைவிட முடியாது அல்லவா?
எனவே, இவர்கள் போன்றவர்கள்தான் ஒன்று கூடி இப்படியான பிரச்சினைகளுக்கு ஊர் பிரமுகர்களின் வழிகாட்டல்களில் அதிகாரமுள்ள அரசியல்வாதிகளைச் சந்தித்து வழிதேடல் வேண்டும் என மக்கள் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர்.

பதவி முடிந்தவுடன் அமைதியாக இருந்து விட்டு பதவிக்கான போட்டிகள் வரும்போது ஆவேசமாக மேடைகளில் பேசி மக்களைக் குழப்பாமல் இப்படியான மக்களுக்கு தேவையானவற்றைப் பெற்றுக்கொள்ள அமைதியாக இருந்து சேவை செய்வதன் மூலம் மக்கள் செல்வாக்கை தொடர்ந்து பெற்றுக்கொள்ள முடியும் என்றும் மக்கள் எமது அரசியல்வாதிகளுக்கு ஆலோசனை வழங்குகின்றனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top