கொச்சிக்கடை தேவாலயத்தின்
நினைவு பெயர் கல்வெட்டில்
15 வயது முஸ்லிம் மாணவனின் பெயர் !
கொச்சிக்கடை
தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு
பெயர் கல்வெட்டில் முஸ்லிம் பெயர் ஒன்று இடம்பெற்றுள்ளமை சமூக வலைகளில்
பேசுபொருளாகியுள்ளது.
கொச்சிக்கடை
தேவாலய தாக்குதலில் பலியானவர்களின் பெயர் கல்வெட்டில் குண்டு தாக்குதல் மேற்கொண்ட
நபரின் பெயர் இடம்பெற்றுள்ளதாக சிலர் கூறியிருந்தனர்.
மொஹமட்
ரிஸ்வான் தற்கொலை தாரி அல்ல எனவும் அவர் தனது பெற்றோர் சகிதம் உயிர்த்த ஞாயிறு
பிரார்த்தனைகளுக்காக வந்த 15 வயது மாணவன் என இது விடயமாக விளக்கம் அளித்த கொச்சிக்கடை தேவாலய பிரதம
மதகுரு குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment