துபாயில் கைது செய்யபட்ட
மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட 5
பேர்
இலங்கைக்கு அழைத்து
வரப்பட்டனர்.
உயிர்த்த
ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 5 சந்தேக நபர்கள் டுபாயில் வைத்து குற்றப்
புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது
கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்
பொலிஸாரால்
தேடப்பட்டு வந்த மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட 5 பேர் இவ்வாறு கைது
செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நேற்று இரவு நாட்டுக்கு
அழைத்து வரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்
பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன்
குணசேகர கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment