எகிப்து முன்னாள் ஜனாதிபதி
முஹம்மது மோர்சி காலமானார்



எகிப்து நாட்டில் ஜனாதிபதியாக முஹம்மது மோர்சி 67 இருந்த போது, இவரை பதவி விலக கோரி பலமுறை போராட்டங்கள் நடந்ததை ஒட்டி, ஜூலை 2013 ல் அந்நாட்டு ராணுவம் இவரை வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து நீக்கியது.
ஜனாதிபதி மாளிகையின் முன்பு போராட்டம் நடத்தியவர்களை கொன்ற குற்றத்திற்காக, முஹம்மது மோர்சிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் 2012-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் தவறான ஆவணங்களை சமர்ப்பித்து வெற்றி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வந்தார் அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை சோதித்த போது இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top