இவ்வளவு கேவலமாக
முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றுவீர்களா?



தேர்தல் அறிவிப்பு வந்ததும் ஒரு முன்னாள் ஆளுநர் தான் ஜனாதிபதித் தேர்தலில் குதிக்க இருப்பதை அறிவித்தார். ஊரூராக கலந்துரையாடல்களை நடாத்தினார். இணையத்தள தொலைக்காட்சிகளிலெல்லாம் பேட்டிகொடுத்தார். அதன்பின் திடீரென மௌனமானார்?

ஏன் ?

வேட்புமனுத் தாக்கலுக்கு நான்கைந்து நாட்கள் முன்னதாக அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சர் திடீரென ஒருவர் போட்டியிடவேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பாக கட்டுரை எழுதினார்.

இதைக் கண்ட முன்னாள் ஆளுநர் ஐந்தாம் திகதி ்ரீ சு கட்சியின் முடிவின்பின் தனது முடிவை அறிவிக்கப்போவதாக சொன்னார்.

திடீரென, அந்த முன்னாள் அமைச்சர் கட்டுப்பணம் செலுத்தினார்.

அதன்பின், விழுந்தடித்துக்கொண்டுபோய் முன்னாள் ஆளுநர் கட்டுப்பணம் செலுத்தினார்.

இறுதியில் முன்னாள் அமைச்சர் போட்டியிடவில்லை. ஆளுநர் போட்டியிடுகிறார்.

இவற்றிற்கிடையே உள்ள தொடர்பைச் சிந்திக்கின்றீர்களா?

போட்டியிடுவதாக அறிவித்த முன்னாள் ஆளுநரின் திடீர் மௌனத்தைத் தொடர்ந்து போட்டியிடும் சமிக்ஞையை வழங்கிய முன்னாள் அமைச்சர் ஆளுநர் போட்டியென்றதும் ஏன் ஒதுங்கினார்? சிந்தித்தீர்களா?

போட்டியிடுவதாக அறிவித்து பின் தயங்கிய ஆளுநரைத் தூண்டுவதற்காக முன்னாள் அமைச்சர் ஆடிய நாடகம்தான் போட்டியிடும் அறிவிப்பு; என்பது புரிகிறாதா?

அவ்வாறாயின் இருவரையும் இயக்குகின்ற இடம் ஒன்றுதான் என்பது புரிகிறதா?

இவர்களின் இந்த சமூகத்துரோகத்தை சித்திக்கும் ஆற்றலற்ற சமூகமா? நாம்.

இவ்வளவு கேவலமாக சமுதாயத்தை ஏமாற்ற நினைக்கிறார்களே! என எண்ணும்போது உள்ளம் ரணகளமாகிறது.

சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top