கட்டையால் தாக்கி நபர் ஒருவர் கொலை
நிந்தவூரில் சம்பவம்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் 1ம், பிரிவு, மீரான்நகர் கடற்கரை வீதி றசூல் மர மில்லுக்கு மூன்பாக உள்ள இடத்தில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் காரணமாக நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு10:30 மணியளவில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது மரக்கட்டை ஒன்றினால் தலையில் தாக்கி குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

72 வயதுடைய முகம்மது தம்பி மீரான் எனும் மீராலெப்பை என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top