Tuesday, June 30, 2015

புனித நோன்பு காலத்தில் இப்தார் நிகழ்வுகளின் போக்குகள் ? ? ?

புனித நோன்பு காலத்தில்
இப்தார் நிகழ்வுகளின் போக்குகள் ? ? ?


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் நேற்று வத்தேகம என்னும் இடத்தில் முஸ்லிம் குடும்பம் ஒன்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வில் பங்கேற்ற போது.....
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் நோன்பு திறப்பதற்கு தயாராகுவதையும் முன்னாள் பிரதி அமைச்சர் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம்.ஏ. காதர் அவர்கள் உட்பட அங்கு கூடியிருந்த முஸ்லிம் சகோதரர்கள் மற்றும் முஸ்லிம் பெண் சகோதரிகள் அவர் நோன்பு திறப்பதை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்பதையும் படங்கள் சொல்லாமல் சொல்லுகின்றது.
இப்தார் நிகழ்வுகள் யாருக்காக? புனித நோன்பை அனுஷ்டித்த ஏழை மக்களுக்காகவா?  இல்லை . . . .

தெளிவில்லாதவர்கள் தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கில்.. - Nagoor Ariff

தெளிவில்லாதவர்கள் தெளிவு பெற வேண்டும்

என்ற நோக்கில்...
Nagoor Ariff


தெளிவில்லாதவர்கள் தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கில்...
விதண்டாவாதிகள் விபரம் பெற வேண்டும் என்ற நோக்கில்...
ஊர்ப்பற்றில்லாதவர்கள் சிந்தித்து மாற வேண்டும் என்ற நோக்கில்...











இப்பாகமுவ மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

இப்பாகமுவ மத்திய கல்லூரியின்
வருடாந்த பரிசளிப்பு விழாவில்
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன


இப்பாகமுவ மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று 30 ஆம் திகதி முற்பகல் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது.












எம்எல்ஏவாக ஜெயலலிதா பதவியேற்கும் விழா திடீர் ரத்து

எம்எல்ஏவாக ஜெயலலிதா பதவியேற்கும் விழா

திடீர் ரத்து

ஆர்.கே. நகர் தொகுதி எம்எல்ஏவாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பதவியேற்கும் விழா இன்று மாலை நடைபெறுவதாக இருந்த நிலையில், திடீரென விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா இன்று மாலையே எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொள்வார் என்று கூறப்பட்டது. எனினும் திடீரென பதவியேற்பு விழா ரத்து செய்யப்படுவதாகவும், இந்த வாரத்துக்குள் அவர் பதவியேற்றுக் கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவின் விமானம் விழுந்து நொறுங்கியதில் 37 பேர் பலி (படங்கள் இணைப்பு)


இந்தோனேஷியாவின் விமானம்
விழுந்து நொறுங்கியதில் 116 பேர் பலி

இந்தோனேஷியாராணுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று சுமத்ரா தீவு அருகே விபத்துக்குள்ளானதாகராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் 116 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து பற்றி மீட்புப்படையை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும் போது "ஹெர்குலஸ் சி 130 என்ற விமானம் சுமத்ரா அருகே உள்ள மேடன் நகர குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. கடைசியாக கிடைத்த தகவலின் படி116 பேர் பலியாகிவிட்டதாக தெரியவந்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்" என தெரிவித்துள்ளார். விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள் என்று சரியான தகவல் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விமானம் மேடனில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து நாடுனா தீவுகளுக்கு புறப்பட சில நிமிடங்களுக்கு பிறகு கீழே விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது.








சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் முன்பாக

சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் முன்பாக


சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் முன்பாக. அனுமதி இல்லை! அனுமதி இல்லை! எமது உள்ளூராட்சி சபயை தடுத்த அரசியல்வாதி எவருக்கும் சாய்ந்தமருது வர அனுமதி இல்லை! என்ற வாசகத்துடன் பதாகை தொங்க விடப்பட்டுள்ளது.



காதோடு காதாக*.*.*.*.*. திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில்

காதோடு காதாக*.*.*.*.*.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில்


சாய்ந்தமருதுக்கு நகராட்சி அந்தஸ்து கிடைக்காமல் தடுக்கப்பட்டதால் அந்த ஊர் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரான கட்சியினர் சாய்ந்தமருதில் செல்வாக்கான அரசியல் பிரமுகர்களை வளைத்துப் போடுவதற்கு கங்கணம்கட்டிக் கொண்டு இருக்கின்றனராம்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ள ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் பிரமுகர்களிடம் சம்மதம் கேட்பது போல் செயல்பட்டாலும் அவரின் நோக்கம் தேசியப்பட்டியல் மூலமாக நாடாளுமன்றம் புகும் விருப்பமாகத்தான் உள்ளதாம்.

கிழக்கு மாகாண அமைச்சர் ஒருவர் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றம் புகும் ஆசையால் தனது பதவியை மற்றொருவருக்கு விட்டுக் கொடுப்பதற்கு முன் வந்திருக்கின்றாராம். அதற்குப் பரிகாரமாகப்  பதவியைப் பெறுபவர் வேட்பாளர் தெரிவில் இவருக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்று கேட்கப்பட்டிருப்பாதாவும் செய்திகள் கசிந்துள்ளன.

சாய்ந்தமருதுக்கு நகராட்சி அந்தஸ்து கிடைக்காமல் போனதால் அந்த ஊர் மக்கள் குறிப்பிட்ட முஸ்லிம் கட்சி மீதும் கட்சித் தலைவர் மீதும் ஆத்திரம் கொண்டிருப்பதுடன் கவலையுடனும் இருந்து கொண்டிருக்கின்றனர் அல்லவா? அம்மக்களை திருப்தி செய்வதற்கு அந்த ஊரைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு கட்சித் தலைவர் (GIFT) வெகுமதி ஒன்றை வழங்க காத்திருக்கின்றார் என்ற செய்தியும் கசிந்து எமக்கு வந்திருக்கிறது. கட்சித் தலைவர் வழங்கும் (GIFT) வெகுமதியா? அல்லது மக்கள் சக்தியா? இது விடயத்தில் வெல்லப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான்  மக்கள் பார்க்க வேண்டும்.

கட்சிக்கு கழுத்தறுப்புக்கள் இக்கட்டான சூழ் நிலைகள் ஏற்பட்டுள்ளது எனக் காரணங்களைக் கூறி கட்சியைக் காப்பாற்றுவதானால் கட்சியின் தலைமை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில்தான் முகம் கொடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அப்படியான ஒரு சூழ்நிலையை தோற்றுவிற்று கட்சித் தலைமை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில்தான் போட்டியிட வேண்டிய நிலைமையை எதிர்பார்க்கலாம்.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் கட்சி, முன்னாள் அமைச்சர் .எல்.எம்.அதாஉல்லாவின் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பனவற்றில் முஸ்லிம்கள் போட்டியிடுவதால் முஸ்லிம் காங்கிரஸுக்கு பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் முஸ்லிம் காங்கிரஸுக்கு தற்போதய விகிதாசார தேர்தல் முறையில் ஒரு ஆசனம் மட்டுமே கிடைக்கும் என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். அது யார்? மாவட்டத்திலுள்ள ஒருவரா? கட்சியின் தலைவரா?


அலரி மாளிகையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட பெண் பிரமுகர்கள்


அலரி மாளிகையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில்
கலந்து கொண்ட பெண் பிரமுகர்கள்


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில்  நேற்று 29 ஆம் திகதி இடம்பெற்ற  இப்தார் நிகழ்வில்   பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் பாரியார் திருமதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு மாநகர மேயர்  முஸம்மில் அவர்களின்  பாரியார் ஜனாபா பாத்திமா பிரோஸா முஸம்மில் உட்பட இன்னும் பல பெண்கள் கலந்து கொண்டிருந்தனர்.





ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா அமோக வெற்றி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்
முதல்வர் ஜெயலலிதா அமோக வெற்றி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி. மகேந்திரனை விட 1.50 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
16 வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா 1,60921 வாக்குகள் பெற்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி. மகேந்திரன் 9,669   வாக்குகள் பெற்றுள்ளார். டிராபிக் ராமசாமி 4,145 வாக்குகள் பெற்றுள்ளார்இந்நிலையில் 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து  தனக்கு வாக்களித்த ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு  முதல்வர் ஜெயலலிதா  நன்றியை தெரிவித்துள்ளார். இந்த இடைத்தேர்தல் 2016ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டம் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று மாலையே அவர் எம்எல்ஏவாக பதவி ஏற்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தலைமைச் செயலகத்தில் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வமான அறிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலையே எம்எல்ஏவாக பதவியேற்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா

இன்று மாலையே எம்எல்ஏவாக பதவியேற்கிறார்
தமிழக முதல்வர் ஜெயலலிதா

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் தமிழக முதல்வரும், அதிமுக வேட்பாளருமான ஜெயலலிதா வெற்றி பெறுவது உறுதியான நிலையில், அவர் இன்று மாலை 4.45 மணிக்கு எம்எல்ஏவாக பதவியேற்க உள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா முன்னிலையில் உள்ளார்.
அவரது வெற்றி உறுதியான நிலையில், இன்று மாலையே அவர் எம்எல்ஏவாக பதவி ஏற்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தலைமைச் செயலகத்தில் செய்யப்பட்டு வருவதகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. தற்போது 14 வது சுற்று முடிவு வெளியாகியுள்ளது.

இதில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா 1,46,247 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி. மகேந்திரன் 8,854  வாக்குகள் பெற்றுள்ளார். டிராபிக் ராமசாமி 3,260 வாக்குகள் பெற்றுள்ளார்.

உலகிலேயே முதல் முறையாக ரோபோ திருமணம் ! ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்!!


உலகிலேயே முதல் முறையாக ரோபோ திருமணம்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்

உலகிலேயே முதன் முறையாக இரண்டு ரோபோக்களுக்கு திருமணம் நடந்த நிகழ்ச்சி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுள்ளது.
இந்த ரோபோக்களை மய்வா டெங்கி என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. ஆண் ரோபோவுக்கு புரோயிஸ் என்றும், பெண் ரோபோவுக்கு யுகிரின் என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஆண் ரோபோ அளவில் பெரியதாக எந்திர மனித உருவிலும், பெண் ரோபோ ஜப்பான் பொம்மை வடிவத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த பெண் ரோபோவுக்கு   மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

திருமணம் முடிந்ததும் இரு ரோபோக்களும் ஒருவரை ஒருவர் முத்தமிட்ட கொண்ட காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது. திருமண விழாவில் இரு தரப்பிலும் பல ரோபோக்கள் விருந்தினர்களாக பங்கேற்றன. பின்னர் ஜப்பான் முறைப்படி ஆடல், பாடல் போன்ற இசை நிகழ்ச்சி நடந்தது அறிவிக்கப்படுகின்றது.