2020.09.02 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் 2020.09.02 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்தீர்மானங்கள்பின்வருமாறு: 01.முதலீட்டு மேம்பாடு தொடர்பில் அமைச்சரவை உப குழு ஒன்றை நியமித்தல் சௌபாக்கிய தொலை நோக்கு கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலம் வறுமையை ஒழிப்பது அனைத்து தரப்பினர்களுக்கும் பலன்கள் கிடைக்கக் கூடிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான மாற்று உற்பத்தி பொருளாதாரத்திற்காக உள்ளுர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டு வசதிகளை ரசாங்கம் முக்கியத்துவம் வழங்கியுள்ளது. இதற்காக கொள்கை ரீவிரிவுப்படுத்தலுக்கு அதியிலும் நடைமுறையிலும் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு அதிமேதகு ஜனாதிபதியின் தலைமையிலும்; கீழ் குறிப்பிட்ட அமைச்சரவை அங்கத்தவர்களைக் கொண்ட முதலீட்டு மேம்பாடு தொடர்பான அமைச்சரவை உப குழுவை நியமிப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடற்றொழில் அமைச்சர் கௌரவ காமினி லொக்குகே அவர்கள் போக்குவரத்து அமைச்சர் கௌரவ பந்துல குணவர்தன அவர்கள் வர்த்தக அமைச்சர் கௌரவ டளஸ் அழகப்பெரும அவர்கள் மின்சக்தி அமைச்சர் கௌரவ ஜோன்ஸ்;டன் பெர்னாண்டோ அவர்கள் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ விமல் வீரவன்ச அவர்கள் கைத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள் சுற்றாடல் துறை அமைச்சர் கௌரவ எஸ்.எம்.சந்திரசேன அவர்கள் காணி அமைச்சர் கௌரவ வாசுதேவ நாணயக்கார அவர்கள் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ உதய பிரபாத் கம்மன்பில அவர்கள் எரிசக்தி அமைச்சர் கௌரவ ரமேஸ் பத்திரண அவர்கள் பெருந்தோட்டத்துறை அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ ரோஹித்த அபே குணவர்தன அவர்கள் துறைமுகம் மற்றும் கப்பல் துறை அமைச்சர் கௌரவ அலி சப்ரி அவர்கள் நீதி அமைச்சர் இதே போன்று இந்த உப குழுவின் பணிகளுக்காக கீழ் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்காகவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கௌரவ துமிந்த திஸாநாயக்க அவர்கள்சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்சார உற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜயந்த சமரவீர அவர்கள்களஞ்சிய வசதிகள், கொல்களன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள் மற்றும் இயந்திரப் படகுகள் மற்றும் கப்பற் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ திலும் அமுனுகம அவர்கள் வாகனங்களை ஒழுங்குப்படுத்தல், பேருந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கௌரவ டீ .வீ. சானக அவர்கள்விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ நாலக்க கொடஹேவா அவர்கள்நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப் பொருட்கள் அகற்றுதல் மற்றும் சமுதாய துப்பரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ அஜித் நிவாட் கப்ரால் அவர்கள்நிதி மற்றும் மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி சீர்திருத்தம் இராஜாங்க அமைச்சர் 02. நடுத்தர வகுப்பின வருமான பயனாளிகளுக்கு அவர்களது வருமானத்திற்கு ஈடுகொடுக்கக் கூடிய வீட்டை நிர்மாணிப்பதற்காக கடன் பத்திரங்கள் மூலம் மூலதனத்தைப் பெற்றுக்கொள்ளுதல் அரச மற்றும் தனியார் துறையில் பணியில் ஈடுபட்டுள்ள நடுத்தர வகுப்பின வருமான பயனாளிகளின் சேவைக்காக அவர்களின் வருமானத்திற்கு ஈடு கொடுக்கக்கூடிய வீட்டை பெற்றுக் கொடுக்கக்கூடிய வகையில் வீடமைப்பு திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்காக 2020.05.27 ஆம் திகதி அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கு அமைவாக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அடிப்படை மூலதனத்தைப் பெற்றுக் கொள்வதற்காக 5 வருட காலத்திற்கு செல்லுபடியான 25 பில்லியன் ரூபா கடன் பத்திரத்தை விடுவிப்பதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரை அமைச்சரவையினால்; அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதே போன்று திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் வீடுகளை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஊடாக கடன் பத்திரத்தை செலுத்துவதற்கும், இந்த வீட்டை பெறுவதற்காக சம்பந்தப்பட்ட கொள்வனவாளர்களுக்கு 25 தொடக்கம் 30 வருடகால எல்லைக்கான நிவாரண கடன் குறைந்த கடன் வட்டி அடிப்படையில் அரச வங்கிகள் மூலம் வீட்டு கடனை வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 03. 20 ஆவது அரசியல் யாப்பு திருத்தல் மற்றும் புதிய அரசியல் யாப்பு ஒன்றுக்கான திருத்த வரைபு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் யாப்பில் 2015 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 19 ஆவது திருத்தத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை மற்றும் குறைபாடுகளை களைவதற்காக குறுகிய கால நடவடிக்கை என்ற ரீதியில் 20 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்திற்கான திருத்த சட்ட மூலத்தை வகுப்பதற்காக சட்ட திருத்த வரைவுக்கு ஆலோசனை வழங்குவதற்கு 2020.08.19 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு அமைவாக சட்ட திருத்த வரைவு பிரிவால் தயாரிக்கப்பட்ட திருத்த சட்ட மூலம் நீதி அமைச்சரினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த திருத்த சட்ட மூலம் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 13 ஆவது திருத்தம் மற்றும் அதற்கு ஏற்புடையதாகாதது என்பதுடன், அரசியல் யாப்பின் 82 (5) யாப்பிற்கு அமைவாக பாராளுமன்றத்தில் 3 இல் 2 இற்கு குறையாத வாக்களிப்புடன் நிறைவேற்றக் கூடிய நிலை இருப்பதாகவும் சட்டமா அதிபரினால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலைப்பாட்டை அமைச்சரவையினால் கவனத்திற் கொண்டு அந்த சட்ட திருத்த மூலத்தை அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடுவதற்கும், அதனைத் தொடர்ந்து அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2020.08.19 ஆம் திகதி அன்று அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்ட வகையில் நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரையை கவனத்திற் கொண்டு புதிய அரசியல் யாப்பு ஒன்றுக்கான அடிப்படை திருத்த சட்ட மூலத்தை தயாரிப்பதற்காக கீழ் குறிப்பிடப்பட்ட நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா அவர்கள் (தலைவர்) ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன அவர்கள் ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா அவர்கள் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன அவர்கள் பேராசிரியர் திருமதி நசீமா ஹமூர்தீன் அவர்கள் கலாநிதி எ.சர்வேஸ்வரன் அவர்கள் ஜனாதிபதி சட்டத்தரணி சமன்த ரத்வத்தே அவர்கள் பேராசிரியர் வசன்த செனவிரத்ண அவர்கள் பேராசிரியல் ஜி.எல்.பீரீஸ் அவர்கள் 04. தேசிய வர்த்தக கொள்கை ஒன்றை தயாரிப்பது தொடர்பில் புத்திஜீவிகள் குழ ஒன்றை நியமித்தல் அமைச்சரவையினால் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்டுள்ள தேசிய வர்த்தக கொள்கையை வகுப்பதில் உரிய வகையில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் கேட்டறிந்து அதன் கொள்கை வகுக்கப்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக தற்போதைய காலத்திற்கு பொருத்தமான வகையில் பதிய தேசிய வர்த்தக கொள்கை ஒன்றை வகுப்பதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் புத்திஜீவிகள் குழு ஒன்றை நியமிப்பதற்காக வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 05. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலைப்பின்னல் முதலான நிறுவனங்களுக்கான மீண்டெழும் செலவுக்காக (Recurring expense) திறைசேரியில் நிதியைப் பெற்றுக்கொள்ளுதல். கொவிட் 19 வைரஸ் தொற்று பரவியதைத் தொடர்ந்து இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலைப்பின்னல் ஆகியவற்றின் வருமானம் குறைவடைந்ததன் காரணமாக இந்த நிறுவனங்களின் சம்பளம் மற்றும் அத்தியாவசிய செலவுகளை சமாளிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் 2020 ஆம் ஆண்டில் செப்டெம்பர்; மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரையிலான 4 மாத காலத்திற்கு இந்த நிறுவனங்களின் அத்தியாவசிய Recurring expense செலவுகளுக்கான நிதியை திறைசேரியில் பெற்றுக்கொள்வதற்காக வெகுஜன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனங்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காக மூலோபாய திட்டத்தை தயாரித்து திறைசேரியின் உடன்பாட்டைப் பெற்று அந்த திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 06. பிரதேச தொழில் பேட்டைகளில் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக காணிகளை ஒதுக்கீடு செய்து வழங்குதல். பிரதேச மட்டத்தில் தொழிற்சாலைகளை மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்டு கைத்தொழில் அமைச்சரினால் ஷஷபிரதேச தொழில் பேட்டை அபிவிருத்தி வேலைத்திட்டம்' நடைமுறைப்படுத்தப்படுகின்றது. சம்பந்தப்பட்ட பிரதேச கைத்தொழில் துறை சேவை குழு ஒன்றினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை அடிப்படையாக கொண்டு இந்த வேலைத்திட்டத்தின் கீழ் இரத்மலானை, களுத்துறை, மில்லேவ, நாலன்த, உலப்பனை, மாகந்துர, ஊவா பரணகம மற்றும் மட்டக்களப்பு ஆகிய தொழில் பேட்டைகளில் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்காக 9 முதலீட்டாளர்களுக்கு 35 வருட காலத்திற்காக குத்தகை அடிப்படையில் காணிகளை ஒதுக்கீடு செய்து வழங்குவதற்கு கைத்தொழிற்துறை அமைச்சரினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 07. இலங்கையில் இயற்கை எரிவாயு தொடர்பான தேசிய கொள்கை இலங்கையில் இயற்கை எரிவாயு தொடர்பான திருத்த சட்ட மூலத்தில் தேசிய கொள்கையை ஆராய்ந்து பார்த்து தேவையான திருத்தத்தை சமர்ப்பிப்பதற்காக புத்திஜீவிகளைக் கொண்ட குழு ஒன்றை நியமிப்பதற்கு 2020 பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு அமைவாக இந்த பணிகளுக்காக நியமிக்கப்பட்ட 17 அங்கத்தவர்களைக் கொண்ட புத்திஜீPவிகள் குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் ஷஷ இயற்கை எரிவாயு கொள்கை' எரிசக்தி அமைச்சர் அவர்களினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அது தொடர்பில் அமைச்சரவையினால் கொள்கை ரீதியில் அங்கீகாரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. 08.புத்தளம் நிலக்கரி அனல் மின் நிலையத்திற்கு உடனடியாக கொள்வனவு செய்யும் நடவடிக்கையின் கீழ் தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்தல். புத்தளம் நிலக்கரி அனல் மின் நிலையத்திற்காக உடனடியாக கொள்வனவு செய்யும் நடவடிக்கையின் கீழ் 300,000 மெற்றிக் தொன் நிலக்கரியை பெற்றுக்கொள்வதற்கான பெறுகை, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விஷேட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கு அமைய M/s Swiss Singapore Overseas Enterprises Pte. Ltd என்ற நிறுவனத்திடம் 16.18 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக மின் சக்தி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 09. கொலன்னாவ கட்டட தொகுதியில் 3 எரிபொருள் களஞ்சிய தாங்கிகளை கொள்வனவு செய்தல் , நிர்மாணித்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல். கொலன்னாவ எரிபொருள் களஞ்சிய கட்டட தொகுதிக்காக 3 எரிபொருள் களஞ்சிய தாங்கிகளை கொள்வனவு செய்தல் , நிர்மாணித்தல் மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கு அமைய Indo – East Engineering and Construction (Lanka) Pvt.Ltd என்ற நிறுவனத்திடம் 942.47 மில்லியன் ரூபாவை (Vat வரி தவிர்த்து) வழங்குவதற்காக எரிசக்தி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 10. அரசாங்க நிறுவனங்களில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள வாகனங்களை செப்பனிட்டு பயன்படுத்துதல் மற்றும் ஒதுக்குதல். உரிய வகையில் பராமரிக்கப்படாததன் காரணமாக தற்பொழுது பயன்படுத்தப்படாத பெரும் எண்ணிக்கையிலான வாகனங்கள் அரசாங்க நிறுவனங்களில் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதுடன் 2020 ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதியளவில் செப்பனிட்டு பயன்படுத்தக்கூடிய 4,116 வாகனங்கள் மற்றும் ஒதுக்குவதற்கான 5,588 வாகனங்கள் இருப்பதாக அடையாளங் காணப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக செப்பனிட்டு பயன்படுத்தக்கூடிய பயனுள்ள வாகனங்களை பழுது பார்ப்பதற்காக சம்பந்தப்பட்;ட நிறுவனங்களுக்கு தேவையான நிதி இல்லாத சந்தர்ப்பத்தில் தேசிய வரவு செலவு திணைக்களத்தினால் அதற்கான நிதியை வழங்குவதற்கும், அவ்வாறு செப்பனிடப்பட்ட வாகனங்களை, போதுமான வாகனங்களைக் கொண்டிராத அரச நிறுவனங்களுக்கு நிதி அமைச்சின் கீழ் உள்ள கணக்கு தணிக்கையாளர் நாயக அலுவலகத்தின் ஊடாக உரிய வகையில் வழங்குவதற்கும், செப்பனிட முடியாத வாகனங்களை ஏற்ற நடைமுறையைக் கடைப்பிடித்து ஒதுக்குவதற்கும் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2020.09.02 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் 2020.09.02 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தீர்மானங்கள்பின... Read more » 10:19 PM