அம்பாறைப் பிரதேசத்திலிருந்து ஒரு துண்டுப் பிரசுரம்!
தலைவர் அஷ்ரப் மரணத்திற்கு யார் உடந்தை!!
அம்பாறைப் பிரதேசத்திலிருந்து ஒரு துண்டுப் பிரசுரம் வெளியாகி இப்பிரதேச பள்ளிவாசல்களில் மக்கள் வாசிப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததாக அறிவிக்கப்படுகின்றது.
இப்பிரசுரம் தொடரும் என்றும் காங்கிரஸ் எம்.ஏ.மன்சூர் என்றும்
தொலைபேசி இலக்கம் 0776336646 என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இவரை மக்கள் விருப்பம்
தொடர்பு கொண்டபோது இவர் அட்டாளைச்சேனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்றும்
அக்கரைப்பற்றில் திருமணம் முடித்தவர் என்றும் துணிச்சலாக தன்னைப்பற்றி அறிமுகப்படுத்திக்
கொண்டார்.
துண்டுப்பிரசுரத்தில்……
அஸ்ஸலாமு அலைக்கும்,
எமது பெரும் தலைவர் அஷ்ரப் அவர்களின் படுகொலை செய்யப்பட்டு 16
வருடங்கள் கடந்துவிட்டது. இன்னும் கொலைக்கான காரணம் என்ன? காரணி யார்? என்று இன்று
வரை கண்டறியப்படவில்லை.
இத்தனைக்கும் ரஊப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் கடந்த
16 வருடங்களாக ஆட்சிப் பங்காளிகளாகவும் அமைச்சர்களாகவும் அரசில் ஒட்டிக் கொண்டுதான்
உள்ளார்கள். கடந்த 16 வருடங்களாக இன்று வரை ஹக்கீம் அமைச்சராக இருந்து கொண்டு சுகபோகங்களை
அனுபவித்துக் கொண்டுதான வருகின்றார்.
ஹக்கீம் தலைமையிலான் முஸ்லிம் காங்கிரஸ் எம்பிக்களில் யாராவது
ஒருவர் பாராளுமன்றத்தில் ஒரு நாளாவது ஒரு தடவையாவது அஷ்ரப் அவர்களின் மரணம் பற்றி ஒரு
விசாரணை செய்ய வேண்டும் என்று பேசியதுண்டா? இன்று வரையும் ஹக்கீம் அஷ்ரப் அவர்களின்
மரணம் பற்றி வாய் திறந்ததுண்டா?
தமிழ் கூட்டமைப்பின்
குரல்
காலம் சென்ற மட்டக்களப்பு
எம்.பி பரராஜசிங்கம், யாழ்ப்பாண எம்.பி ரவிராஜ் ஆகியோர்களின் கொலை பற்றி இன்னும் தமிழ்
கூட்டமைப்பு பாராளுமன்றத்திலும் வெளியிலும் குரல் கொடுத்துக் கொண்டுதான் வருகின்றார்கள்.
அதனால் தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றது. ஆனால் தலைவர் அஷ்ரப் அவர்களால் வளர்க்கப்பட்ட
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஹக்கீம் இன்று முற்று முழுதாக தனது ஆதிக்கத்தில் வைத்துக்
கொண்டு இன்று ஹக்கீம் சுகபோக வாழ்க்கை நடத்தி வருகின்றார். ஹக்கீம் தனது முழுக் குடும்பத்தையும்
இந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியால் வாழ வைத்துக் கொண்டு சுகபோக வாழ்க்கை நடாத்தி வருகின்றார்.
தலைவர் அஷ்ரப் அவர்களின்
மரணம் பற்றி நிந்தவூர் ஹஸனலி, ஏறாவூர் பஷீர் சேகுதாவூத் (முன்னாள் எம்.பிக்கள்) ஆகியோர்கள்
வாய் திறக்க வேண்டும். இவர்கள் இருவரும் வாய் திறந்தால் மட்டும்தான் மக்களுக்கு உண்மை
தெரியவரும்.
தலைவர் அஷ்ரப் அவர்களின்
மரணச் செய்தி கிடைத்ததும் மலைப்பகுதியான அரநாயக்க பகுதியில் முதன் முதலாக சென்றவர்
றஊப் ஹக்கீம். கட்சியில் இருந்து யாரின் அனுமதியுமின்றி தன்னிச்சையாகவே அவ்விடத்திற்கு
சென்று வந்த பின்பும்கூட இன்னும் வாய் திறக்கவில்லை.
தலைவர் பயணித்த விமானத்தைச்
செலுத்தியவர் மிகவும் அனுபவமிக்கவர். குறித்த விமானத்தில் இரண்டு கறுப்பு பெட்டிகள்
இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. ஆனால் ஒரு பெட்டி கூட கண்டெடுக்கப்பட்வில்லையாம். இப்படியான
மர்மங்கள் நிறைந்த எமது தலைவர் கொலை பற்றி எமது எம்.பிக்கள் யாராவது ஒரு நாளாவது வாய்
திறக்கவில்லையே.
இவர்கள்தான் கேட்கவில்லை
என்றால் வாக்களிக்கும் மக்களாவது எமது தலைவரின் மர்ம மரணம் பற்றி கேட்க மாட்டோமா? மக்களாகிய
நாம் வாய் திறக்கவில்லை என்றால் இந்த மர்ம மரணம் பற்றி மக்கள் அறியாமலேயே போய்விடும்.
மிக விரைவில் நடைபெறவுள்ள
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்காக ஹக்கீம் எம்மை முட்டாள்களாக்கி வாக்கு வேட்டையாட
வரும்போது நாம் எமது தலைவரின் மர்ம மரணம் பற்றி வாய் திறப்போம். கேட்போம். உண்மை வெளிவரட்டும்.
நீதி நிலைக்கட்டும். (தொடரும்)
காங்கிரஸ் எம்.ஏ.மன்சூர்-
0776336646
Do you need a loan to pay off Bills?
ReplyDeleteDo you need a loan?
Do you need Personal Loan?
Business Expansion Loan?
Business Start-up, Education,
Debt Consolidation Loan
Hard Money Loans
Loan for any thing ?
We offer loan at low interest rate of 2%
Loan with no credit check,
email: abdullahibrahimlender@gmail.com
whatspp Number +918929490461
Mr Abdullah Ibrahim