கட்சியின் தலைவர்  அமர்ந்து கதைப்பதற்கு
இடமளிக்காத நஸீர் அஹமட்


'முட்டாளே, இங்கிருந்து வெளியே போ. ஒழுங்குமுறையென்றால் என்னவென்று உனக்குத் தெரியாவிட்டால், வெளியே போ. என்னை நிறுத்துவதற்கு நீ யார்? உனக்கு என்னைப்பற்றி தெரியாது, வாயை மூடு.
 (ஆளுநரைப் பார்த்து) ஆளுநரான நீங்களும் கூட, ஒழுங்குமுறை என்னவென்று தெரிந்திருக்கவில்லை. மரியாதைக்குரிய தூதுவரை நான் மதிக்கிறேன். ஆனால் ஒழுங்குமுறை உள்ளது. உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் ஆளுநரே, ஒழுங்குமுறையென்றால் என்னவென்று தெரிந்திருக்க வேண்டும்'

இவ்வாறு  ஆத்திரப்பட்டு கூறிய 
 கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்கள் தனதுகட்சியின் தலைவருக்கு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு அருகில் இடத்தை  வழங்காமல் கட்சியின் தலைவர் தலை குணிந்து கதைப்பதற்கு இடமளித்துள்ளார். இது ஒரு வருடத்திற்கு முன் இடம்பெற்றது. 

நஸீர் அஹமட் அவர்களின் ஒழுக்கத்தைப் பாரீர்!

முஸ்லிம் காங்கிரஸினால் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் நியமனமான கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்கள் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை இப்புகைப்படங்களைக் கொண்டு கட்சி பேதமின்றித் முஸ்லிம் சகோதரர்களே தீர்மானியுங்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் ஏதோ பேச முற்படுகின்றார். அதற்காக கட்சியின் தலைவருக்கு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு அருகில் இடத்தை ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்கள் வழங்காமல் கட்சியின் தலைவர் தலை குணிந்து கதைப்பதற்கு இடமளித்துள்ளார்.
இது கட்சித் தலைவருக்கு கொடுக்கும் சரியான மரியாதையா?

கட்சித் தலைவரின் மரியாதையை காப்பாற்ற வேண்டியது கட்சியிலுள்ள ஏனையவர்களின் கடமையல்லவா?




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top