ஏறாவூர் இரட்டைக்கொலை

எவ்வாறு கொலை செய்யப்பட்டார்கள்!
உண்மை புலப்பட்ட விதம்!!

ஓட்டமாவடியைச்சேர்ந்த மபாஸ் என்பவன் முன்னாள் இராணுவ வீரனாவான் அவனே கதவடைக்கும் பொல்லால் அடித்து கொலை செய்ததாக ஒப்புதல் அளித்துள்னான் எனத் தெரிவிக்கப்படுகின்றது. .
வசம்பு மற்றும் ராசிம் இருவரும் அவருடன் உடன் சென்றுள்ளனர். அவனுடன் இன்னும் ஒரு நபரும் உடன் சென்றுள்ளான் அவன் தற்போது மட்டக்களப்பு சிறையில் வேறு ஒரு தண்டனையில் பேரில் அடைக்கப்பட்டுள்ளான்.(அந்த சம்பவம் பின்னால் குறிப்பிடப்பட்டுள்ளது)
சுமார் இரண்டரை மணியளவில் வசம்பு ஓட்டினை கழட்டி இறங்கியுள்ளான். பின்னர் சமையலறை கதவை திறந்து மற்ற இருவரும் வந்துந்தளனர்.
தூக்கத்தில் இருந்த தாய்க்கு கதவடைக்கும் பொல்லினால் ஓட்டமாவடியைச்சேர்ந்த மபாஸ் அடித்து கொலை செய்திருக்கிறான் உடனே விளித்தெழுந்த மகள் அவர்களுடன் சண்டை செய்திருக்கிறாள் பின் அவளையும் ஓட்டமாவடியைச்சேர்ந்த மபாஸ் என்பவனே அடித்து கொலை செய்திருக்கிறான்
கொலையை திசைதிருப்பும் முகமாக ஏறாவூரைச்சேர்ந்த ராசிம் உடைகளை களைந்திருக்கின்றான். அனைத்துக்கும் உடந்தையாக வசம்பு இருக்கின்றான்.
கொலையை செய்துவிட்டு மதிலால் பாயும்போது விழுந்ததினால் ராசிமுக்கு கையிலும் காலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
கொலையை முடித்து வந்ததும் மாஹிரின் தம்பி பாஹிம் ஐந்நு இலட்சம் ரூபாயை கூலியாக ஓட்டமாவடியைச்சேர்ந்த மபாஸின் கையில் அந்த ஒழுங்கையில் வைத்தே வழங்கியுள்ளான்.
ஆனால் அந்த பெண் அலரும் சத்தம் பக்கத்து வீட்டு அனைவருக்கும் கேட்டும் அவர்கள் கல் நெஞ்சுடன் இருந்துள்ளமை கவலையை அளிக்கின்றது. ஏறாவூர் பொலிஸார் அவர்களை ஏசியதாகவும் அறியக்கிடைத்தது.
கொலை நடந்த பின் நடந்த சம்பவங்கள்:-
கொலை நடந்த மறுதினமே மாஹிரின் தம்பி பாஹிம் சந்தேகத்தின் பேரில் கைது செய்து மட்டக்களப்பு பொலிஸில் விசாரணையில் உள்ளான்.
கொலை செய்த மறுநாள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏறாவூரைச்சேர்ந்த (பெயர் அறியக்கிடைக்கவில்லை) நபர் வீட்டுக்குசென்று தன் உடைகளை எரித்துவிட்டு பொலீஸ் நிலையம் வந்து ( கொலை நடந்த தினம் காலை 9:00 மணியளவில்) தன் மீதுள்ள கஞ்சா வழக்கு பிடிவராந்தில் தன்னை கைது செய்யுமாறும் தான் வெளிநாடு செல்வேண்டும் ஆகவே அந்த வழக்கை முடித்துவிடுமாறும் கூற என் உறவுமுறை பொலீஸ் அதிகாரி நீதிமன்றம் அழைத்து சென்று தீர்ப்பின்படி மட்டக்களப்பு சிறையில் கஞ்சா வழக்கில் அடைக்கப்பட்டான். அதன் பின் 11:00 மணியளவிலே பொலிஸாருக்கு கொலை தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.
பின்னர் பல்கோண விசாரணைகள் தொடங்கின
உண்மை புலப்பட்ட விதம்
சந்தேகத்துக்கிடமான நபரின் புகைப்படத்தை (CCTV) முகநூலில் பதிவேற்றிபின் உடனே நீக்கியது அனைவரும் அறிந்ததே
இந்த சம்பவம் தான் கொலையாளியை கண்டறிய உதவியது அதற்காக பொலிஸார் ஹாஜியார் அவர்களுக்கு நன்றியும் தெரிவித்தனர்.
முகநூலில் ஹாஜியார் பதிவிட்டதை பார்வையிட்ட பெயர் குறிப்பிட இயலாத ஓரு நபர் ஏறாவூர் பொலிஸாரை அணுகி Oic மற்றும் குறிப்பிட்ட சில உத்தியோகத்தர்களிடம் (என் நெருங்கிய உறவினர் உட்பட) ஓர் இரகசியம் கொலை தொடர்பாக கூறவேண்டும் என கூறி ஒரு மாதத்துக்கு முன்னரே மாஹிரின் தம்பி தன்னை அணுகி ஒரு கொலை செய்யவேண்டும் எட்டு இலட்சத் கூலி என பேரம்பேசிய தகவலையும் தான் மறுத்த தகவலையும் கூறினார்.
அப்போது ஊழல் தடுப்பு பொலீஸ் பிரிவில் கடமையாற்றும் ரு உத்தியோகத்தர் பாஹிமுடன் இன்னும் சிலர் ஆற்றாங்கரை மைதானத்தில் கொலை நடந்த இரவுக்கான மஹ்ரிப்புடைய நேரம் (கொலைக்கு முன்) கண்டதாக கூற விசாரணை அந்த கோணத்தில் ஆரம்பமாகி அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
ஊர்மக்கள் பொலீஸ் முன்னால் போட்ட கூச்சல் மற்றும் பதற்றமான சூழ்நிலை காரணமாக குற்றவாளிகளை மேலும் விசாரணை செய்ய இயலாமல் மட்டக்களப்பு பொலீஸில் ஒப்படைத்துவிட்டதாகவும் தகவல் கிடைத்தது.
எது எப்படியோ பல ஊர் பொலிஸார் களத்தில் நின்றும் கொலையாளிகளை கண்டுபிடித்த ஏறாவுர் பொலிஸார் மற்றும் நசீர் ஹாஜியார் பாராட்டுக்குறியவர்கள்

ஆனால் மாஹிர் தலைமறைவாகியுள்ளான் என்ற தகவலும் கிடைத்தது.









2 comments:

  1. Do you need a loan to pay off Bills?
    Do you need a loan?
    Do you need Personal Loan?
    Business Expansion Loan?
    Business Start-up, Education,
    Debt Consolidation Loan
    Hard Money Loans
    Loan for any thing ?
    We offer loan at low interest rate of 2%
    Loan with no credit check,
    email: abdullahibrahimlender@gmail.com
    whatspp Number +918929490461
    Mr Abdullah Ibrahim

    ReplyDelete

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top