இருக்காரா? இல்லையா?:
மர்ம மனிதன் கிம்
வடகொரிய ஜனாதிபதி கிம்மின் உடல் நிலை
குறித்து பல்வேறு
தகவல்கள் வெளிவந்து
கொண்டிருக்க, கொரோனா பரவல் மற்றும் வடகொரியவைத்
தாக்கவிருக்கும் புதிய புயல் குறித்து அதிகாரிகளிடம்
கிம் ஆலோசனை
நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து
வடகொரிய அரசு
ஊடகம் தரப்பில்,
'வடகொரிய அதிகாரிகளுடன்
இணைந்து கிம்
ஆலோசனைக் கூட்டம்
நடத்தினார். அப்போது கிம் கையில் சிகரெட்
வைத்திருந்தார்' எனக் கூறப்பட்டுள்ளது. கூட்டத்தில் அதிகாரிகளுடன்
கிம் என்ன
ஆலோசித்தார் என்ற முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.
வடகொரிய
ஜனாதிபதி கிம் ஜாங் உன் கோமா
நிலையில் இருப்பதால்,
அவரது சகோதரியான
கிம் யோ
ஜாங்கிடம் நாட்டின்
அனைத்துப் பொறுப்புகளும்
ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தென்கொரியாவின் முன்னாள்
ஜனாதிபதியான கிம் டே ஜங்கின்
உதவியாளராக இருந்த சாங் சங் மின்
தெரிவித்திருந்தார். ஆனால், இந்தத்
தகவலை வடகொரியா
மறுத்தது. இந்த
நிலையில் கிம்
அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற செய்தி
வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
.
0 comments:
Post a Comment