துணை மற்றும் இடைக்கால
வைத்திய சேவைக்கு
1360 பேர் நியமனம்
சுகாதார
சேவையின் துணை மற்றும் இடைக்கால வைத்திய சேவையின் மற்றும் பயிற்சி பெற்றவர்கள் ஆயிரத்து 360 பேருக்கு நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த
நிகழ்வு நேற்று (20) பிற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் பங்கேற்பில் அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி
கோட்டாபய ராஜபக்ஷவின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக சுதந்திர சுகாதார சேவையின் மனித வளத்தை மேம்படுத்தி சுகாதார தரத்தை மேம்படுத்துவதற்கு இதனூடாக நடவடிக்கை எடுப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம் மற்றும் சமூக பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி,
துணை மற்றும் இடைக்கால வைத்திய சேவை ஊழியர்களின் கீழ் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.