'பாக்., ஜிந்தாபாத்' :
முழக்கமிட்ட இளம்பெண் கைது
கர்நாடகாவில்
சிஏஏ.,வுக்கு எதிராக போராட்டத்தின் போது பாகிஸ்தான் வாழ்க என முழக்கமிட்ட இளம்பெண்,
தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூருவில்
ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி தலைமையில் சிஏஏ.,வுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது நடந்த பொதுக் கூட்டத்தின் போது திடீரென மேடை ஏறிய இளம்பெண் ஒருவர், 'இந்துஸ்தான் ஜிந்தாபாத், பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என மைக்கை பிடித்து
முழக்கமிட்டார். பிறகு இந்துஸ்தான் ஜிந்தாபாத் மற்றும் பாக்., ஜிந்தாபாத் இடையேயான வித்தியாசம் குறித்து அவர் பேச துவங்கினார்.
அப்போது
மேடையில் இருந்த ஓவைசி உள்ளிட்ட சிலர் விரைந்து வந்து அந்த பெண்ணை தடுத்தனர். அவரிடம் இருந்து மைக்கை வாங்க முயற்சித்தும், அப்பெண் பிடிவாதமாக பேச முயற்சித்தார். இதனையடுத்து அங்கு பாதுகாப்பிற்கு வந்த போலீசாரை அழைத்த ஓவைசி, அப்பெண்ணை அழைத்துச் செல்லும் படி கூறினார்.
இதனையடுத்து
அப்பெண் அழைத்துச் செல்லப்பட்டு, விசாரிக்கப்பட்டு, அவர் மீது பிரிவு 124ஏ கீழ் தேச
துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக பேசிய ஓவைசி, இத்தகைய முழக்கம் கண்டனத்திற்குரியது. இப்பெண் எங்கள் அமைப்பை சேர்ந்தவர் அல்ல. பாரத் ஜிந்தாபாத் என்பதே எங்களின் முழக்கம். பாக்., ஜிந்தாபாத் என்பது அல்ல என்றார்.
0 comments:
Post a Comment