சாய்ந்தமருதில் பிறந்து
சாதனை படைத்த பெண்கள்
எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி
சர்வதேச மகளிர் தினமாகும். இத்தினத்தைக் கொண்டாடும் நோக்கமாக நாட்டில் பல
இடங்களிலும் வைபவங்களை ஏற்பாடு செய்து அறிவுசார்ந்த பெண்கள், துணிச்சல்மிக்க
பெண்கள், சாதனை செய்த பெண்கள் என பலரைத் தெரிவு செய்து பாராட்டுவார்கள், பரிசில்கள்
வழங்குவார்கள்.
அந்த வகையில் சாய்ந்தமருதில் பிறந்து சாய்ந்தமருதுக்கு பெருமை தேடிக் கொடுத்த மூன்று
அறிவு சார்ந்த பெண்களை சாய்ந்தமருது மக்கள் எளிதில் மறந்துவிட முடியாது.
எமது இன்றைய இளைஞர்கள் அவர்களைப் பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டியது
அவசியமாகும். அதனைக் கருத்தில் கொண்டு அவர்கள் பற்றிய விபரங்களை இங்கு
தருகின்றோம்.
பாத்துமுத்து ஹலால்தீன், (இலங்கையின் முதலாவது பயிற்றப்பட்ட முஸ்லிம் பெண் ஆசிரியை) இவர் கல்முனையில் படித்தபின் கோப்பாயில் பயிற்றப்பட்ட
ஆசிரியையானார் (1943).
தேசபந்து ஜெஸிமா இஸ்மாயில், (இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் பல்கலைக்கழக வேந்தர்) இவர் கொழும்பில் ஆங்கில மொழி மூலம் படித்து
கிழக்கின் முதல் முஸ்லிம் பட்டதாரியாகவும் வெளியேறினார்.
ஏ.எல்.என்.மைமூனா, (இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் மேல் நீதிமன்ற நீதிபதி)
இதேவேளை, 1971ஆம் ஆண்டில் மஹ்மூத் மகளிர் கல்லூரி ஆரம்பிக்கப்படமுன் றைஹானா
அபூசாலிஹ், பரீதா மஜீத் ஆகியோர் கல்முனை கொண்வன்டில் கல்வி பயின்றபின் அளுத்கமையில் படித்து பயிற்றப்பட்ட
ஆசிரியைகளானார்கள்.
றைஹானா அபூசாலிஹ் என்பவர் (மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபராக
இருந்த மர்ஹும் எம்.சி.ஏ ஹமீது அவர்களின் சகோதரி) சாய்ந்தமருதில் இரண்டாவது
பயிற்றப்பட்ட ஆசிரியையாவார்.
றகுமா பீவி இஸ்மாயில், சுபைதா மரைக்கார் தம்பி, ஜெஸீமா
ஜுனைதீன், சுலைஹா பீவி ஆகிய பெண்களும் அன்று கார்மேல் கொண்வன்டில் பயின்று அளுத்கம ஆசிரியர் பயிற்சி கலாசாலை
சென்று ஆசியைகளாக கடமை புரிந்தவர்கள்.
பெளஸியா அபூபக்கர், ஹஸீனா ஸறூக் பலாலி ஆசிரியர் பயிற்சிக்
கல்லூரியில் பயின்று ஆசிரியைகளாகக் கடமை செய்தவர்கள்.
இது போன்று, 1971ஆம் ஆண்டில் மஹ்மூத் மகளிர் கல்லூரி
ஆரம்பிக்கப்படமுன் பின்வரும் பெண்கள் எஸ்.எஸ்.சி அல்லது ஜீ.சீ.ஈ சாதாரண தரம் வரை பயின்று
பரீட்சையில் சித்தியடைந்து ஆசிரியைகளானார்கள்.
எஸ்.எல்.றசினா (உதுமானாச்சி)
பெளஸியாஅலியார்
ஏ.எல்.உம்முல் வாரிதா
ஆமினா யூஸுப்
சித்தி நபிஸா மீராஸாஹிபு
சக்கியா ஹமீது
எம்.எஸ்.ஹுஸைமா
ஜிப்ரியா ஏ.பாவா (பட்டதாரி)
அவ்வா நூர்முஹம்மது
சல்மா அலியார்
எஸ்.எல்.லதீபா
ஆமினா ஜிப்ரி
- ஏ.எல்.ஜுனைதீன்,
ஊடகவியலாளர்
கிழக்கு மாகாணத்தின் முதல் பெண் மௌலவியாவும், முதல் பயிற்றப்பட்ட மௌலவி ஆசிரியையான ஜனாபா. நஜீமா காதர் மொஹிடீன் அவர்களை நீங்கள் மறந்தது மனவருத்தத்திற்குரியது
ReplyDeleteகிழக்கு மாகாணத்துக்கே முதல் பெண் மௌலவியா ஜனாபா நஜிமா காதர் மொகிதீன் இவரும் சாய்ந்தமருதை சேர்ந்தவர்தான் முதல் மௌலவியா ஆசிரியர்
ReplyDelete