நூலிழையில் உயிர் பிழைத்தேன்:
கமல் பேட்டி




இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் தான் நூலிழையில் உயிர் பிழைத்ததாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு, சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள .வி.பி., பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.

 படத்தின் பாடல் காட்சிக்காக, பிரமாண்ட அரங்கு அமைக்கும் பணியின் போது, நேற்றிரவு (பிப்.,19) ராட்சத கிரேன், அறுந்து விழுந்தது. இதில், உதவி இயக்குனர் கிருஷ்ணா, கலை உதவியாளர் சந்திரன் மற்றும் தயாரிப்பு உதவியாளர் மது ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; 10 பேர் காயமடைந்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களிடம் கமல் பேசியதாவது:

உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி வழங்குகிறேன். உயிரிழந்தவர்களுக்கு இந்த இழப்பீடு போதாது. என் குடும்பத்தில் நிகழ்ந்த இழப்பாகவே இதை கருதுகிறேன். கிரேன் விபத்து நடந்த 4 நொடிகளுக்கு முன்பு தான் இயக்குனர் அங்கிருந்து நகர்ந்து சென்றார். கிரேன் விழுந்த கூடாரத்தின் அடியில் தான் நானும், கதாநாயகியும் இருந்தோம். நான் இரண்டு அடி நகர்ந்து இருந்தால் இப்போது உயிருடன் இருந்திருக்க மாட்டேன். நூலிழையில் உயிர் தப்பினேன். சினிமாவில் கடைநிலை ஊழியனுக்கு கூட பாதுகாப்பும், காப்பீடும் கொடுக்க வேண்டியது கடமை. இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top