மலேசிய புதிய பிரதமராக
முகைதீன் யாசின் நியமனம்
மலேசியாவின்
புதிய பிரதமராக முகைதீன் யாசினை 72, அந்நாட்டு மன்னர் அப்துல்லா பஹாங் நியமித்துள்ளார்.
மலேசியாவின் பிரதமராக இருந்தவர் மகாதீர் முஹம்மது 94.
உலகின் வயதான பிரதமரான
இவர், அன்வர் இப்ராஹிமின்
மக்கள் நீதிக்கட்சியின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியில் இருந்தார். இருவருக்கும் இடையே
கருத்து வேறுபாடு ஏற்பட, மகாதீர் தனது பதவியை பெப்., 24ல் ராஜினாமா செய்தார். புதிய பிரதமர் தேர்வு செய்யப்படாததால், குழப்பமான சூழல் நிலவியது. இந்நிலையில்,
முகைதீன் யாசின் புதிய
பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பல்வேறு துறைகளின் அமைச்சர் மற்றும் துணை பிரதமராக பதவி
வகித்துள்ள முகைதீன், 1947 மே 15ல் பிறந்தார்.
பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். மயூர் மாவட்ட உதவி அதிகாரியாக பணியில்
சேர்ந்தார்.1971ல் யு.எம்.எம்.ஓ.,
கட்சியில் சேர்ந்து
அரசியலில் நுழைந்தார். 1972ல் அந்நாட்டு பாராளுமன்றத்தில் முதன்முதலாக எம்.பி., ஆனார். 2018 வரை எட்டு முறை எம்.பி.,யானார். 1995 - 2009 வரை உள்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், வர்த்தகம் மற்றும் நுகர்வோர் நலன், விவசாயம், கல்வி அமைச்சராக பதவி வகித்தார். 2009 -
2016 வரை யு.எம்.எம்.ஓ.,
கட்சியின் துணை தலைவராக
இருந்தார் .
2009 ஏப்., 10 - 2015 ஜூலை 28 வரை துணை பிரதமராக பதவி வகித்தார். 2016
ஆகஸ்டில் முன்னாள்
பிரதமர் மகாதீர் முஹம்மதுவுடன் இணைந்து மலேசிய ஐக்கிய மக்கள் கட்சியை தொடங்கினார்.
இக்கட்சியின் தலைவராக நீடிக்கிறார்.
0 comments:
Post a Comment