நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காத
அம்பாறை மாவட்ட முஸ்லிம் எம்.பிக்கள்
கூடுதலான
நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின்
விபரங்கள் தற்போது
வெளியாகியுள்ளன.
இதன்
அடிப்படையில் முதல் பத்து இடங்களுக்குள் எந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இடம் பிடிக்கவில்லை.
நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றுள்ள முஸ்லிம்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் தர வரிசை பின்வருமாறு,
முஜிபுர்ரஹ்மான -------- 24
ரவூப் ஹக்கீம்----------------33
றிஷாத் பதியுதீன்-----------51
மரிக்கார்----------------------57
பைஸல் முஸ்தபா--------59
இஷாக் ரஹுமான்--------------- 60
அப்துல் மஹ்றூப்------------62
கபீர் ஹாஸீம்-----------------64
அலிஸாஹீர் மெளலானா-----------97
அமீர் அலி சிஹாப்தீன்----------137
இம்ரான் மஹ்றூப்-------------------140
பைஸல் காஸீம்--------------------146
எம்.ஐ.எம்.மன்சூர்--------------------149
காதர் மஸ்தான்-------------151
எச்.எம்.எம்.ஹரீஸ்-------------161
அப்துல் ஹலீம்------------------164
ஏ.எச்.எம் பெளஸி----------------167
முஹம்மது நஸீர்-------------198
எம்.எஸ்.தெளபீக்-------------219
எஸ்.எம்.எம்.இஸ்மாயில்------------224
இந்த தர வரிசையில் ஐந்தாவது இடத்தை ஈழ மக்கள்
புரட்சிகர முன்னணியின்
நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா பெற்றுள்ளார்.
அந்த
வகையில் ஒன்பது
மற்றும் பத்தாவது
இடங்களை தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன், ஸ்ரீநேசன் ஆகியோர்
பெற்றுள்ளனர்.
முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு
தீர்வுகளை பெற்றுக்
கொள்ள வேண்டுமாயின்
முதலில் அதனை
உரியவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இதில்
பெரும் பங்கு
முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கே உள்ளது.
அதிலும் குறிப்பாக
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது என்பதை மறுக்க
முடியாது.
எனவே
நாடாளுமன்ற அமர்வுகளில் தவறாமல் அல்லது இயலுமானவரை அதிகமாக
சமூகமளிக்கும் போதே மக்களின் பிரச்சினைகளை தெரியப்படுத்த
முடியும்.
இதன்
அடிப்படையில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக அம்பாறை
மாவட்ட முஸ்லிம் எம்.பிக்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றுள்ள தர வரிசையை நோக்கும்போது கவலைக்குரிய விடயமே என
அரசியல் ஆய்வாளர்கள்
தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment