தற்காலிக ஊழியர்களின் நியமனத்தை
இடைநிறுத்துவது தொடர்பில்
கல்முனை மாநகரசபையில் முறுகல்

தற்காலிக ஊழியர்களின் நியமனத்தை இடைநிறுத்துவது தொடர்பில் ஏற்பட்ட வாதப்பிரதி வாதங்களால் அமைதி இன்மை நிலவியதனால் சிறிது நேரம் சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகரசபையின் பெப்ரவரி மாதத்திற்கான கூட்ட அமர்வு நேற்று மாலை சபை முதல்வர் சட்டத்தரணி எம்.எ.றக்கீப் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

இதில் கடந்த கூட்டறிக்கையில் சேர்க்கப்பட்ட விடயமான தற்காலிக ஊழியர்களின் நியமன இடைநிறுத்தம் குறித்து சரியான விளக்கம் உள்வாங்கப்படவில்லை என உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன் மற்றும் சி.எம்.முபீத் ஆகியோர் முதல்வரிடம் கேள்விகளைத் தொடுத்துள்ளனர்.

தொடர்ந்து முதல்வர் குறித்த விடயத்திற்கு பதிலளிப்பதற்காக அவகாசம் கோரி பதிலளிக்க முற்பட்ட வேளை ஏற்பட்ட சலசலப்பு காரணமாக 45 நிமிடம் சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பின்னர் அனைத்து கட்சி உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னர் சபை நடவடிக்கைகள் யாவும் முதல்வர் தலைமையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு நிறைவடைந்தன.

மேலும் புதிதாக கல்முனை மாநகரசபையின் உறுப்பினர்களாக வருகை தந்த வடிவேல்கரசு சந்திரன் குஞ்சித்தம்பி விஜயலட்சுமி ஆகியோர் தத்தமது கன்னி உரைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.





0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top