இணைந்த இளம் போராளிகள்:
வைரலான புகைப்படம்
இரு இளம்போராளிகளான கிரேட்டா தன்பெர்க், மலாலா யூசப் ஆகியோர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சந்தித்து கொண்டனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
2012 ம் ஆண்டு பாக்ன் ஸ்வாத் பள்ளத்தாக்கு பகுதியில் பெண் கல்விக்கு ஆதரவாக குரல் கொடுத்த மலாலா யூசுப்பை (22) தாலிபன்கள் கழுத்தில் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த மலாலா, நீண்ட போராட்டத்திற்கு பிறகு சிகிச்சை பெற்று குணமடைந்தார் . தொடர்ந்து பெண் கல்விக்காக குரல்கொடுக்கும் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலை.,யில் பயின்று வருகிறார்.
அதேபோல் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கிரேட்டா தன்பெர்க் (17), கடந்தாண்டு செப்., மாதத்தில் நியூயார்க் நகரில் ஐ.நா., சபையில் பருவநிலை மாற்றம் குறித்து ஆவேசமாக பேசியது உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றது. காலநிலை மாற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்துவருகிறார்.
பிரிட்டனில் காலநிலை பாதுகாப்பை வலியுறுத்தி பாடசாலை மாணவர்கள் இணைந்து நடத்திய போராட்டத்தில் கிரேட்டா கலந்துகொண்டார். அப்போது அதன் அருகில் இருந்த ஆக்ஸ்போர்டு பல்கலை.,க்கு சென்று மலாலாவை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மலாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.
சமூக வலைதளங்களில் வைரலான இந்த புகைப்படம் இதுவரை 3.7 லட்சம் லைக்குகளை கடந்துள்ளது. இதற்கு அமெரிக்க நடிகை மைன்டி காலிங், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோரும் தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
0 comments:
Post a Comment